ராஷ்ட்ரிய உலமா கவுன்சில் RUC அமெரிக்காவுக்கு கண்டனம்
ராஷ்ட்ரிய உலமா கவுன்சில் அமெரிக்காவுக்கு கண்டனம்
.................
ராஷ்ட்ரிய உலமா கவுன்சில் தமிழ்நாடு மாநிலத் தலைவர் A. அக்ரம் கான் இந்தியா மீது அமெரிக்க அரசு எடுத்துள்ள கடும் வரி உயர்வு தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறேன்
25% இல் இருந்து 50% ஆக இறக்குமதி வரி இரட்டிப்பாக்கப்பட்டிருப்பது, இது வெறும் வர்த்தகக் கொள்கை அல்ல – இது இந்தியாவின் உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வாழ்வாதாரத்தை தாக்கும் பொருளாதாரத் தாக்குதல் ஆகும். குறிப்பாக, தமிழ்நாட்டின் முதன்மைத் துறைகளுக்கு நேரடி ஆபத்து ஏற்படுத்தும்.
அதாவது போர் செய்யாமலே இந்தியாவுக்கு வரியை ஏத்தி அளிக்கும் திட்டமாகும்
இந்த வரி உயர்வு ஆகஸ்ட் 6, 2025 அன்று அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழகத்தின் முக்கிய ஏற்றுமதி துறைகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் ஏற்படவிருக்கும் தாக்கங்கள்:
● தோல் மற்றும் காலணித் துறை:
அம்பூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் சென்னை* போன்ற பகுதிகள் இந்திய தோல் ஏற்றுமதியில் 50% பங்குடன் முன்னணியில் உள்ளன 25% வரி இந்த தொழில்களை முடக்கவைக்கும் அளவிற்கு தாக்கம் ஏற்படுத்தும்.
● நெசவு மற்றும் ஆடைகள்:
திருப்பூர், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இயங்கும் ஏராளமான நெசவுத் தொழில்கள் சர்வதேச போட்டியில் தங்கள் நிலையை இழக்க நேரிடும்.
● நகை மற்றும் ரத்தினத் துறை:
சென்னை, மதுரை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் உள்ள நகை தொழில்களில் வேலைவாய்ப்புகள் குறையும், விற்பனை வீழ்ச்சி ஏற்படும்.
மோட்டார் உதிரிப் பாகங்கள் மற்றும் பொறியியல் பொருட்கள்: ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் போன்ற தொழில்துறை மையங்கள் ஆர்டர்கள் ரத்து மற்றும் வளர்ச்சி மந்தம் போன்ற ஆபத்துக்கு உள்ளாகும்.
இந்திய அரசுக்கு எச்சரிக்கை:
இந்திய அரசு இந்த மோசமான தீர்மானத்திற்கு எதிராக தெளிவான நடவடிக்கை எடுக்கத் தவறினால், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நான் நேரில் முன்னிலை வகித்து மக்கள் போராட்டங்களை நடத்துவேன்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரே ஒரு ராஷ்ட்ரீய உலமா கவுன்சில் உறுப்பினர் இருந்தால்கூட, அது மட்டுமே ஒரு அமைதியான எதிர்ப்பு போராட்டத்தை தொடங்க போதுமானது.
நாம் சாலைகளில் பாய்ந்து இறங்குவோம்! அமைதியோடு ஆர்ப்பாட்டம் செய்வோம்! ஆனால் எந்த நிலையிலும் மௌனமாக மாறமாட்டோம்!
எங்களின் நான்கு முக்கிய கோரிக்கைகள்:
1️.அமெரிக்காவுடன் உயர் மட்ட துாதரக பேச்சுவார்த்தை நடத்தி, இந்த 50% வரி உயர்வை திரும்பப் பெறவோ குறைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்
2️. தமிழ்நாட்டின் முக்கிய துறைகள் தோல், நெசவு, நகை, காலணி ஆகியவற்றுக்கு அரசு நிவாரணமும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.
3️. இந்திய அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு தகவல் அளிக்க வேண்டும்.
4️. எதிர்காலத்தில் வெளிநாட்டு அதிகாரங்களால் மேற்கொள்ளப்படும் சீரற்ற வரி உயர்வுகளுக்கு எதிராக இந்திய ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்கும் நீண்டகாலக் காப்பாற்றும் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
இறுதி உரை:
“இந்த 25% வரி உயர்வு என்பது வெறும் வர்த்தக முடிவல்ல — இது இந்தியா மற்றும் தமிழ்நாடு மீது அமெரிக்கா மேற்கொண்ட பொருளாதாரத் தாக்குதல்!” இந்திய அரசு *தன் உற்பத்தியாளர்களையும் தொழிலாளர்களையும்* காக்கத் தயங்கினால், நான் அவர்களுக்காக குரல்கொடுக்கத் தயார்
மக்களின் குரல் உலகம் எங்கும் கேட்கும் வரை ராஷ்ட்ரிய உலமா கவுன்சில் தீவிரமாக உரக்க பேசும்!
இணக்கத்திலும் நீதியிலும் உறுதியுடன்,
A. அக்ரம் கான்
மாநிலத் தலைவர் - RUC
ராஷ்ட்ரிய உலமா கவுன்சில் தமிழ்நாடு
👍
ReplyDelete