சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

  பரங்­கி­ம­லை­யில் ரயில் முன் கல்­லூரி மாண­வியை தள்ளி கொலை செய்த வழக்­கில் கைதான இளை­ஞர் சதீஷ் குற்­ற­வாளி என மக­ளிர் சிறப்பு நீதி­மன்­றம் உத்­தர விட்­டுள்­ளது. தண்­டனை விவ­ரம் வரும் 30-ம் தேதி அறி­விக்­கப்­பட உள்­ளது.

சென்­னையை அடுத்த ஆலந்­தூர் காவ­லர் குடி யிருப்­பைச் சேர்ந்­த­வர் மாணிக்­கம். சொந்­த­மாக கார் வைத்து வாட­கைக்கு ஓட்டி வந்­தார். இவ­ரது மனைவி ராம­லட்­சுமி, ஆதம்­பாக்­கம் காவல் நிலை யத்­தில் ஏட்­டா­கப் பணி யாற்­றி­னார். இத்­தம்­ப­தி­யின் மூத்த மகள் சத்யா(20), தியா­க­ராய நக­ரில் உள்ள தனி­யார் கல்­லூ­ரி­யில் பிசிஏ 3-ம் ஆண்டு படித்து வந்­தார். இவர், அதே பகு­தி­யைச் சேர்ந்த ஓய்­வு­பெற்ற உதவி ஆய்­வா­ளர் தயா­ள­னின் மகன் சதீஷ் (31) என்­ப­வ­ரைக் காத­லித்து வந்­தார்.

இந்­நி­லை­யில், பெற்­றோர் கண்­டித்­த­தால் சத்யா, திடீ ரென்று காதலை கை விட்­டார். இத­னால் ஆத்­திர மடைந்த சதீஷ், கடந்த 2022-ம் ஆண்டு அக்.13-ம் தேதி கல்­லூரி செல்­வ­தற்­காக பரங்­கி­மலை ரயில் நிலையத்­தில் காத்­தி­ருந்த சத்­யாவை, அந்த வழி­யாக வந்த ரயில் முன்பு தள்ளி படு­கொலை செய்­தார்.

இது­தொ­டர்­பாக சி.பி.சி.ஐ.டி. போலீ­ஸார் விசா ரணை நடத்தி சதீஷை கைது செய்து, அவர் மீது நீதி மன்­றத்­தில் குற்­றப்­பத்தி ரிக்கை தாக்­கல் செய்­த­னர். இந்த வழக்கு விசா­ரணை சென்னை அல்­லி­கு­ளத்­தில் உள்ள மக­ளிர் சிறப்பு நீதி மன்­றத்­தில் நீதி­பதி ஸ்ரீதேவி முன்­னி­லை­யில் நடந்­தது.

70 பேரி­டம் விசா­ரணை: போலீ­ஸார் தரப்­பில் சிறப்பு அரசு வழக்­க­றி­ஞர் ரவீந்­தி­ர­நாத் ஜெய­பால் ஆஜ­ராகி, ‘சதீஷ் மீதான குற்­றச்­சாட்டு கடு­மை­யா­னது. அவ­ருக்கு அதி­க­பட்ச தண்­டனை வழங்க வேண்­டும் என வாதா­டி­னார். அரசு தரப்பு சாட்­சி­கள் 70 பேரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

அனைத்­துத் தரப்பு விசா ரணை­யும் முடி வடைந்த நிலை­யில், நீதி­மன்­றத்­தில் சதீஷ் நேற்று ஆஜர்­ப­டுத்தப் பட்­டார். இதை­ய­டுத்து நீதி­பதி பிறப்­பித்த உத்­தர வில், ‘‘தமிழ்­நாடு பெண் வன்­கொ­டுமை தடுப்­புச் சட்­டம் மற்­றும் இந்­திய தண்­டனை சட்­டப்­பி­ரிவு 302 (கொலை) ஆகி­ய­வற்­றின் கீழ் சதீஷ் மீதான குற்­றச்­சாட்டு நிரூ­ப­ண­மாகி உள்­ளது. எனவே, அவரை குற்­ற­வாளி என அறி­விக்­கி­றேன். தண்ட னை விவ­ரம் 30-ம் தேதி தெரி­விக்­கப்­ப­டும். அன்­றைய தினம் சதீஷை மீண்­டும் நீதி­மன்­றத்­தில் போலீ­ஸார் ஆஜர்­ப­டுத்த வேண்­டும்’’ என்று கூறப்­பட்­டுள்­ளது.

கழக அரசு விரைந்து நடவடிக்கை!

இவ்­வ­ழக்­கில் விரைந்து தீர்ப்­பி­னைப் பெற்­றிட, கழக அரசு முனைப்­பான சட்ட நட­வ­டிக்­கை­கள் மேற்­கொண்­டது என்­ப­தும் – அரசு தலைமை குற்­ற­வி­யல் வழக்­க­றி­ஞர் அசன்­மு­கம்­மது ஜின்­னா­வின் வழி­காட்டு தலில், சென்னை மாவட்ட அரசு தலைமை குற்­ற­வி­யல் வழக்­க­றி­ஞர் ஜி.தேவ­ரா­ஜன் மேற்­பார்­வை­யில், அரசு சிறப்பு வழக்­க­றி­ஞ­ராக ரவீந்­தி­ரன் ஜெய­பால், இவ்­வ­ழக்­கில் ஆஜ­ராகி வாதா­டி­னார் என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­க­

தா­கும்.


Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்