மக்களவையில் கதிர் ஆனந்த் வலியுறுத்தல்!
கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதியில் லத்தேரி, ரங்கம்பேட்டை, வடுகந்தாங்கல் ரயில்வே லெவல் கிராசிங்குகளில் ரயில்வே மேம்பாலம் – சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி வேலூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. கதிர் ஆனந்த் மக்களவையில் ஜீரோ நேரத்தின் போது வலியுறுத்தினார்.
அவர் பேசியதாவது:–
பேரவைத் தலைவர் அவர்களே!
எனது வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளான லத்தேரி, செஞ்சி, அரும்பாக்கம், பனமடங்கி, களம்பட்டு, தொண்டாந்துளசி ஒருபுறமும் அன்னங்குடி, விழுந்தாங்கல், திருமணி, சோழமூர், கொத்தமங்கலம் ஆகிய பகுதிகள் மறுபுறம் இருக்க இப்பகுதிகளுக்கு மக்கள் சென்று வருவதற்கு ஏதுவாக ரயில் பாதையில் L.C.57ல் ரயில்வே மேம்பாலம் அல்லது ரயில்வே சுரங்கப்பாதை அமைத்திட வேண்டும்.
மேலும் ரங்கம்பேட்டை LC.58ல் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்திடவும், வடுகந்தாங்கல் LC.59ல் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்திடவும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி. கதிர் ஆனந்த் ஜீரோ நேரத்தின் போது ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்தார்
Comments
Post a Comment