இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் குற்றச்சாட்டு!
வக்ஃப் மசோதா அவசர கதியில் நிறைவேற்றப் பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்ட தால், நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவை நேற்று காலை கூடியதும் இந்திய பொருட்கள் மீது அமெரிக்காவின் வரி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் வலி
யுறுத்தினர். ஆனால், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மீண்டும் கூடியதும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவசர கதியில் நீண்ட நேரம் அவையை நடத்தி வக்ஃப் மசோதாவை நிறை
வேற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மோசடி போன்ற முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படாமல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா வரி:
எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
இதற்கிடையே இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதித்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய விளக்கம் அளிக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியப் பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஒன்றிய அரசு புறந்தள்ளி யது.
இந்நிலையில், இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதித்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய விளக்கம் அளிக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி
எம்.பிக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது, இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகள் இந்தியப் பொருளாதாரத்தை முற்றிலும் சீரழிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டின.
Comments
Post a Comment