நாடா­ளு­மன்­றத்­தில் – வக்ஃபு சட்­டம் மீதான விவா­தத்­தில் – தயா­நி­தி­மா­றன் கண்­ட­னம் !

மக்­க­ள­வை­யில் 12 மணி நேரத்­திற்­கும் மேலாக நீடித்து, நள்­ளி­ர­வைக் கடந்து நடை­பெற்ற வக்ஃப் (திருத்த) மசோதா குறித்த கடு­மை­யான விவா­தங்­கள் எழுந்­தன.

ஒன்­றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த இந்த மசோதா, சிறு­பான்மை­யின­ரின் உரி­மை­க­ளைப் பாதிக்­கும் வகை­யில் செயல்­ப­டும் என்று கடும் எதிர்ப்பு கிளம்­பி­யது.

திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில், கழக நாடா­ளு­மன்­றக் குழு­வின் துணைத் தலை­வர் தயா­நிதி மாறன் இந்த மசோ­தா­விற்கு எதி­ராக தீவி­ர­மாக உரை­யாற்­றி­னார்.

மசோ­தா­வின் அர­சி­யல் நோக்­கத்­தை­யும், முஸ்­லிம் சமூ­கத்­தின் மீதான அதன் தாக்­கத்­தை­யும் அவர் தெளி­வா­கச் சுட்­டிக்­காட்­டி­ னார்.

உத்­த­ரப் பிர­தே­சத்­தில் பா.ஜ.க. வின் ஆத­ரவு குறைந்­தி­ருப்­ப­தை­யும், வெற்­றிக்­காக மத அர­சி­ய­லைத் தூண்­டும் உத்­தி­க­ளை­யும் அவர் வெளிப்­ப­டுத்­தி­னார்.

பா.ஜ.க. அரசு, தனது நண்­பர்­க­ளான பெரிய தொழி­ல­தி­பர்­க­ளுக்கு ஆத­ர­வாக செயல்­ப­டு­வ­தா­க­வும், சிறு­பான்­மை­யி­ன­ரின் சொத்­துக்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் வலையை விரிப்­ப­தா­க­வும் அவர் குற்­றம் சாட்­டி­னார்.

அவ­ரு­டைய உரை பின்­வ­ரு­மாறு:

இன்று திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பாக இந்த வக்ஃப் மசோ­தாவை எதிர்த்து உரை­ யாற்­று­கி­றேன். இந்த மசோ­தா­வைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு முக்­கி­யக் கார­ணம் எண்­ணிக்­கை­க­ளில் தெரி­கி­றது: 71, 62, 36. இவை என்­ன­வென்று தெரி­யுமா?

2014இல் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் பா.ஜ.க. வென்ற எம்.பி. இடங்­கள் 71, 2019இல் 62, 2024இல் 36. 1990இல், ‘பாபர் மசூ­தியை இடிக்க வேண்­டும், அங்கு ராமர் கோயி­லைக் கட்ட வேண்­டும், ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறி 71 இடங்­க­ளைப் பிடித்­தார்­

கள். பின்­னர் அவர்­க­ளின் செல்­வாக்கு சரிந்து, 36 இடங்­க­ளு­டன் ராமர் கோயி­லைத் திறந்­தார்­கள்.

இஸ்­லா­மி­யர்­க­ளி­ட­மி­ருந்து பாபர் மசூ­தி­யைப் பறித்­த­தோடு, இந்­துக்­க­ளி­ட­மி­ருந்து, குறிப்­பாக ஏழை விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்து, சுமார் 4,500 ஏக்­கர்­க­ளைப் பறித்­தார்­கள். விமான நிலை­யங்­கள், சாலை­கள், பணக்­கா­ரர்­க­ளுக்­காக ஐந்து நட்­சத்­திர ஓட்­டல்­கள் கட்­டு­வ­தற்­காக இதைச் செய்­தார்­கள்.

இதன் விளைவு என்ன? 2024 தேர்­த­லில் அயோத்­தி­யில் வெற்றி பெற்­ற­வர் யார்? சமாஜ்­வாடி கட்­சி­யைச் சேர்ந்­த­வர் 56,811 வாக்­கு­க­ளால் வென்­றார். இதை அவர்­க­ளால் தாங்க முடி­ய­வில்லை. இந்­துக்­க­ளுக்­கும் முஸ்­லிம்­க­ளுக்­கும் இடையே வெறுப்­பைத் தூண்­டி­னால் மட்­டுமே தங்­க­ளுக்கு வெற்றி கிடைக்­கும் என்று அவர்­கள் நினைக்­கி­

றார்­கள்.

அவர்­க­ளின் வெற்­றிக்கு கார­ணம் வெறுப்பு, வெறுப்பு உணர்வு, பிரி­வினை அர­சி­யல் மட்­டுமே.

நான் கேட்­கி­றேன், ‘ஆடு நனை­கி­றது என்று ஓநாய் அழு­கி­ற­தாமா? இஸ்­லா­மி­யர்­க­ளைப் பற்றி வருத்­தப்­ப­டு­வது போல் நடிக்­கி­றீர்­களா?’ தொடர்ந்து இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு எதி­ராக மசோ­தாக்­க­ளைக் கொண்­டு­வந்­தது யார்? அமித் ஷா அவர்­கள்­தானே!

காஷ்­மீர் மசோ­தா­வைக் கொண்­டு­வந்­த­தும் அவர்­தானே! அப்­போது நாங்­கள் கேட்­டோம், ‘வட இந்­தி­யா­வுக்கு மட்­டும் மசோதா கொண்டு வரு­கி­றீர்­கள், இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்கு ஏன் கொண்டு வர­வில்லை?’ என்று. ஆனால் உங்­கள் காதில் அது விழ­வில்லை.

உங்­க­ளுக்கு வந்­தால் ரத்­தம்­எங்­க­ளுக்கு வந்­தால் தக்­காளி சட்­னியா?

இன்று இந்த மசோ­தா­வைக் கொண்­டு­வ­ரு­கி­றீர்­கள். வக்ஃப் சொத்­துக்­கள் குறைந்த விலைக்கு விற்­கப்­ப­டு­கின்­ற­னவா? இத­னால் யார் கஷ்­டப்­ப­டு­கி­றார்­கள் என்று பாருங்­கள்! ‘உங்­க­ளுக்கு வந்­தால் ரத்­தம், எங்­க­ளுக்கு தக்­காளி சட்­னியா?’ என்று கேட்­கி­றேன்.

ஏர் இந்­தி­யாவை 16,000 கோடிக்கு விற்­றீர்­கள், ஆனால் அதன் கடன் 63,000 கோடி. உங்­கள் நண்­பர்­க­ளான அதானி, அம்­பானி போன்­றோ­ருக்கு 4.5 லட்­சம் கோடி கட­னைத் தள்­ளு­படி செய்­தீர்­கள். அதற்கு மசோதா கொண்­டு­வ­ர­வில்­லையே? இப்­போது பெண்­க­ளுக்­காக என்று சொல்­கி­றீர்­கள்.

தமிழ்­நாட்­டில் வக்ஃப் வாரி­யத் தலை­வ­ராக ஒரு பெண் இருந்­தி­ருக்­கி­றார். இப்­போ­தும் இரண்டு பெண்­கள் உள்­ள­னர். ஒரு­வர் தமிழ்­நாடு முஸ்­லிம் லீக் முன்­னாள் தலை­வர் அப்­துல் சம­தின் மகள், முன்­னாள் எம்பி. பெண்­கள் ஏற்­கெ­னவே இதில் இருக்­கி­ றார்­கள்; நீங்­கள் புதி­தாக எதையோ செய்­வது போல் நடிக்­கி­றீர்­கள்.

ஏன் இந்­தப் பிரி­வினை வாதம்?

உண்­மை­யில், உங்­க­ளுக்கு உத்­த­ரப் பிர­தே­சத்­தில் வெற்றி வேண்­டும். அங்கு வென்­றால் மட்­டுமே ஆட்­சிக்கு வர முடி­யும். வக்ஃப் நிலங்­க­ளைப் பார்த்­தால், இந்­தி­யா­வில் 8,70,000 சொத்­துக்­கள், 9,40,000 ஏக்­கர்­கள், சுமார் 1.2 லட்­சம் கோடி மதிப்பு உள்­ளது. இதில் 25% உத்­த­ரப் பிர­தே­சத்­தில் உள்­ளது. இதை விட்­டு­வி­டு­வீர்­களா? ஏன் இந்­தப் பிரி­வி­னை­வா­தம்?

இந்த அரசு சிறு­பான்­மை­ய­ருக்கு எதி­ரா­கவே செயல்­ப­டு­கி­றது. வாஜ்­பாய் காலத்­தில் ஒரு இஸ்­லா­மிய அமைச்­சர் இருந்­தார். இப்­போது உங்­க­ளி­டம் ஒரு இஸ்­லா­மிய கூட இல்லை.

நாங்­க­ளா­வது முஸ்­லிம்­க ­ளு­டன் கூட்­டணி வைத்து, ராஜ்­ய­ச­பா­வில் முஸ்­லிம் எம்பி வைத்­தி­ருக்­கி­றோம். இன்று ஒரு சிறு­பான்மை அமைச்­ச­ரும் உள்­ளார். நீங்­கள் நல்­லது எதை­யும் செய்­ய­வில்லை.

முத­லில் இஸ்­லா­மி­யர்­களை ஒழித்­தார்­கள், அடுத்து கிறிஸ்­த­வர்­களை ஒழிப்­பார்­கள், பின்­னர் தலித்­களை ஒழிப்­பார்­கள், பின் யாரும் மிச்­ச­மி­ருக்க மாட்­டார்­கள்.

நீங்­கள் பசுத்­தோ­லைப் போர்த்­திய புலி­யைப் போல் மக்­களை ஏமாற்றி, வாக்கு வங்கி அர­சி­யல் செய்­கி­றீர்­கள். இதைச் செய்­யா­தீர்­கள். நன்றி, மிக­வும் நன்றி, அவைத் தலை­வர் அவர்­களே, இந்த வாய்ப்பை அளித்­த­தற்கு நன்றி.

இவ்­வாறு அவர் உரை­யாற்­றி­னார்

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்