மக்களவையில் கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா கண்டன உரை!

நாடாளுமன்ற மக்களவையில் கழகக் கொறடாவும் கழகத் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.இராசா அவர்கள் வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதா மீது உரை யாற்றும்போது ‘‘ஒன்றிய அரசின் வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதி­ராக சட்­ட­மன்­றத்­தில் முதல் தீர்­மா­னம் கொண்டு வந்­த­வர் தமிழ்நாடு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்’’ என்றும் ‘‘அர­சி­யல் சட்ட மாண்­பு­களை படு­கொலை செய்து இஸ்­லா­மி­யர்­க­ளின் உரி­மை­களை பறிக்­கும் நாசிச செயலை நிறுத்­த வேண்டும்’’ என்றும் கூறினார்.

இது குறித்து மக்களவையில் ஆ.இராசா அவர்கள் பேசியதாவது:–

திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் நிலைப்­பாட்டை இங்கே எடுத்­து­ரைக்க எனக்கு வாய்ப்­ப­ளித்த அவைத்­த­லை­வர் அவர்­க­ளுக்கு நன்றி.

சிறு­பான்மை நலத்­துறை அமைச்­சர் கிரண் ரிஜிஜு பேசி­யதை முழு கவ­னத்­து­டன் கேட்­டுக்­கொண்­டி­ருந்­தேன். தனது துணிச்­ச­லைப் பற்றி அவரே புகழ்ந்து கொண்­டார். அவர் எப்­படி இவ்­வ­ளவு ‘துணிச்­ச­லு­டன்’ நாடா­ளு­மன்­றத்­தில் அதீத கற்­பனை கட்­டுக்­க­தை­களை (Cock and Bull Story) சொல்­லிக்­கொண்­டி­ருக்­கி­றார் என நான் வியக்­கிறேன்.

பதவி விலகவும் தயார்!

அமைச்­ச­ருக்கு நான் துணிச்­ச­ லு­டன் சவால் விடு­கி­றேன். நீங்­கள் இன்று பேசி­யதை நாளை எழுத்து வடி­வத்­தில் எடுத்து வக்பு நாடா­ளு­மன்ற கூட்­டுக் குழு அறிக்கை குழு­விற்கு முன்பு அளிக்­கப்­பட்ட சாட்­சி­யங்­கள் மற்­றும் ஆவ­ணங்­களை ஒப்­பீடு செய்து பாருங்­கள். இரண்டு பதி­வு­க­ளும் ஒத்­துப் போகு­மா­னால் நான் எனது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து வில­க­வும் தயா­ராக இருக்­கி­றேன்.

உங்­கள் கட்­டுக்­கதை உடைக்­கப்­பட்­டு­விட்­டது!

எது இந்த மசோ­தாவை கொண்­டு­வர உங்­களை உந்­தித்­தள்­ளி­யது என நீங்­கள் இந்த அவை­யில் ஏற்­க­னவே கூறி­யதை நினை­வு­­படுத்திப் பாருங்­கள். இந்த மசோ­தாவை முத­லில் தாக்­கல் செய்­த­போது என்ன சொன்­னீர்­கள், தமிழ்­நாட்­டில் திருச்­சி­ராப்­பள்ளி மாவட்­டத்­தில் ஒரு கிரா­மத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்­கர் நிலங்­களை வக்பு சொத்­துக்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக சொன்­னீர்­கள்; அவை­களை போன்ற லட்­சக்­க­ணக்­கான ஏக்­கர் நிலங்­களை மீட்­கவே இந்த மசோதா என்­றும் சொன்­னீர்­கள். நாடா­ளு­மன்ற கூட்­டுக் குழு தமிழ்­நாட்­டிற்கு வந்­தது. மாவட்ட ஆட்­சி­யர், வரு­வாய்­துறை செய­லா­ளர், வக்பு வாரிய தலை­வர் ஆகி­யோர் குழு­வுக்கு முன்­பாக வாக்கு மூலம் கொடுத்­தார்­கள். மூவ­ரும் நாடா­ளு­மன்ற கூட்­டுக்­குழு தலை­வரை சந்­தித்­தார்­கள். கூட்­டுக் குழு­வின் தலை­வர் இந்த அவை­யில்­தான் இருக்­கி­றார். ஆதா­ரங்­களை அகற்­றி­விட்­டார்­கள் எனும் உங்­கள் கட்­டுக்­கதை உடைக்­கப்­பட்­டு­விட்­டது. உடனே இப்­போது வேறு புதிய பொய்­யான புனை­வுக்­க­தை­யு­டன் வந்­தி­ருக்­கி­றீர்­கள்.

அவைத் தலை­வர் அவர்­களே, இங்கே வேடிக்கை இது­தான். நாடா­ளு­மன்­றத்­தில் ஒரு இஸ்­லா­மிய உறுப்­பி­னர்­கூட இல்­லாத ஒரு கட்­சி­தான் சிறு­பான்­மை­யி­ன­ரின் உரி­மை­கள் காக்­கப்­பட ஒரு மசோ­தாவை கொண்டு வந்­தி­ருக்­கி­றது. அவர்­கள் கட்­சி­யி­லி­ருந்து இந்த மசோ­தாவை ஆத­ரிக்க ஒரு இஸ்­லா­மிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கூட இல்லை. ஒரு இஸ்­லா­மிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்­கு­கூட வாய்ப்­ப­ளிக்க மன­மில்­லா­த­வர்­கள்­தான் மதச்­சார்­பின் ­மையை பாது­காப்­பது குறித்து எங்­க­ளுக்கு பாடம் எடுக்­கி­றார்­கள். இன்று நமது இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் ஒரு குறிப்­பி­டத்­தக்க நாள். மதச்­சார்­பில்­லாத இந்த நாடு நம் சுதந்­திர போராட்ட தியா­கி­க­ளும் அர­சி­யல் சட்­டத்தை உரு­வாக்­கிய நம் தேசத்­த­லை­வர்­க­ளும் சுட்­டிக்­காட்­டிய வழி­யில் பய­ணிக்க போகி­றதா அல்­லது வகுப்­பு­வாத சக்­தி­கள் முடிவு செய்­ததை போல் மனி­த­கு­லத்­திற்கு எதி­ரான போரை சந்­திக்க போகி­றதா எனும் தலை­யெ­ழுத்தை தீர்­மா­னிக்­கும் நாள், இந்த நாள். தமிழ்­நாடு சட்­டப்­பே­ர­வை­யில் இச்­சட்­டம் தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை குறிப்­பிட்டு எனது உரையை தொடங்க விரும்­பு­ கி­றேன். வக்பு மசோ­தா­விற்கு எதி­ராக தமிழ்­நாடு சட்­டப்­பே­ர­வை­யில் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு. க. ஸ்டாலின் அவர்­கள் ஒரு தீர்­மா­னத்தை முன்­மொ­ழிந்­தார். அத்­தீர்­மா­னம் ஒரு மன­தாக நிறை­ வேற்­றப்­பட்­டது. எங்­கள் நிலைப்­பாடு இது­தான். தீர்­மா­னத்­தின் வரி­கள் இவை:

உச்­ச­நீ­தி­மன்­றத் தீர்ப்­புக்கு எதி­ரா­னது!

“நாடா­ளு­மன்­றத்­தில் முன்­மொ­ழி­யப்­பட்ட வக்பு திருத்த மசோதா, சிறு­பான்­மை­யி­னர் உரி­மை­கள், மத சுதந்­தி­ரம் மற்­றும் அர­சி­ய­ல­மைப்­பிற்கு எதி­ரா­னது; வக்பு உரு­வாக்­கப்­பட்­ட­தன் நோக்­கத்­திற்கு எதி­ரா­னது; உச்­ச­நீதி மன்ற தீர்ப்­புக்கு எதி­ரா­னது; தேவை­யற்­றது மற்­று­மின்றி குழப்­ப­மா­ன­தும் கூட. இதை நிறை­வேற்­றி ­னால் வக்பு நிறு­வ­னங்­களை முடக்­கு­வ­து­டன் இஸ்­லா­மிய சமூ­கத்­திற்கு கேடு­கள் விளை­யும். அத­னால் தமிழ்­நாடு சட்­டப்­பே­ரவை வக்பு திருத்த மசோ­தாவை கைவி­டு­மாறு ஒன்­றிய அரசை வலி­யு­றுத்­து­கி­றது”

நாட்­டின் ஒரு­மைப்­பாடு கேள்­விக்­குள்­ளாக்­கப்­ப­டும்!

அவைத் தலை­வர் அவர்­களே, மக்­க­ளின் அர­சி­யல் மற்­றும் நாட்­டின் இறை­யாண்­மை­யின் மாண்­பு­கள் (Political Will and Sovereign Power) இந்த அவை­யில் பிர­தி­ப­லிப்­ப­து­போல் அல்­லது பிர­தி ­ப­லிப்­ப­தா­கக் கரு­தப்­ப­டு­கி­றது. அதே நேரத்­தில் மாநில சட்­ட­மன்­றத்­தில் பிர­தி­ப­லிக்­கும் தமிழ்­நாட்­டின் ­அ­ர­சி­யல் விருப்ப மாண்பு முற்­றி­லும் வேறு மாதிரி உள்­ளது! இந்­த­வே­று­பாட்­டை­யும் முற்­றி­லும் எதிர்­மா­றான கூறு­க­ளை­யும் நீங்­கள் ஏற்­றுக் கொள்­ளப்­போ­வ­தில்லை என்­றால், பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக் கொள்­ள­வில்லை என்­றால், இந்த நாட்­டின் ஒரு­மைப்­பாடு கேள்­விக்கு உள்­ளாக்­கப்­ப­டும்; தய­வு­செய்­து­அ­தைக் கவ­னத்­தில் கொள்­ளுங்­கள்.

நாட்­டின் சுதந்­தி­ரத்­திற்கு பின் 1949இல் அர­சி­ய­ல­மைப்பு சட்­டம் உரு­வா­கிக் கொண்­டி­ருந்­த­போது, உங்­க­ளுக்கு பிடித்த தலை­வ­ராக நீங்­கள் தவ­றாக சித்­த­ரித்­துக் கொள்­ளும் இந்­தி­யா­வின் இரும்பு மனி­தர், சர்­தார் வல்­ல­பாய் பட்­டேல் அவர்­கள் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யில் சிறு­பான்­மையி­ன­ருக்­

கான ஆலோ­ச­னைக் குழுத் தலை­வ­ராக இருந்­தார் என்­பதை நினை­வூட்ட விரும்­பு­கி­றேன். பட்­டேல் அவர்­கள் சிறு­பான்மை மக்­க­ளின் உரி­மை­களை வரை­ய­றுக்­கும் குழு­வின் தலை­வ­ராக இருந்­த­போது, அந்­தக் குழு­வின் உறுப்­பி­னர்­கள் யார்? இந்­திய ஜனா­தி­ப­தி­யாக பின்­னா­ளில் வந்த அவைத்­த­லை­வர் டாக்­டர் ராஜேந்­தி­ர­பி­ர­சாத், பின்­னர் இந்­திய பிர­த­ம­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பண்­டித ஜவ­ஹர்­லால் நேரு, டாக்­டர்­அம்­பேத்­கர் மற்­றும் டாக்­டர் முன்ஷி. இதற்கு சர்­தார் வல்­ல­பாய் படேல் தலைமை தாங்­கி­னார். குழு பரிந்­து­ரை­களை வரை­ய­றுத்து ஒரு­அ­றிக்­கையை 1949 மே 25 அன்று அர­சி­ய­ல­மைப்பு அவை­யில் கொண்டு வந்­தது. அந்த அறிக்­கையை முன்­மொ­ழிந்து பட்­டேல் பேசி­யதை இங்கே எடுத்­துக்­காட்ட விரும்­பு­கி­றேன்.

“ஐந்து பேர் கொண்ட துணைக்­கு­ழுவை ஆலோ­ச­னைக்­குழு நிய­மித்­தது, அதில் நமது மதிப்­பிற்­கு­ரிய ஜனா­தி­ப­தி­யும் உறுப்­பி­னர்­க­ளில் ஒரு­வ­ராக இருந்­தார், பண்­டிட்­ஜ­வ­ஹர்­லால்­நேரு, நான், முன்ஷி, மற்­றும் டாக்­டர். அம்­பேத்­கர் ஆகி­யோர் குழு­வின் உறுப்­பி­னர்­க­ளாக இருந்­தோம். குழு பிப்­ர­வ­ரி­யில் கூடி அதன் அறிக்­கையை வழங்­கி­யது” என்று அவரே குறிப்­பிட்டு விட்டு, அந்த அறிக்­கைக்­கான ஒப்­பு­தலை பட்­டேல் கோரி­ய­போது, அவர் பேசிய சில வரி­கள் மிகுந்த தொடர்­பு­டை­யன. எனவே, அதனை இங்கே மேற்­கோள்­காட்ட விரும்­பு­கி­றேன்:

“விடு­த­லைக்­குப்­பின் நாட்­டின் மாறி­வ­ரும் சூழ்­நி­லை­யில், மதச்­சார்­பற்ற அர­சின் உண்­மை­யான அடித்­த­ளங்­க­ளை­அ­மைப்­பது அனை­வ­ரின் நல­னுக்­கா­க­வும் என்ற முடி­வுக்கு அவர்­கள், அதா­வது முஸ்­லிம்­கள் உண்­மை­யி­லேயே நேர்­மை­யாக வந்­தி­ருந்­தால், பெரும்­பான்­மை­யி­ன­ரின் நல்­லெண்­ணத்­தை­யும் நியாய உணர்­வின் மீதும் நம்­பிக்கை வைப்­ப­து­தான் சிறு­பான்­மை ­யி­ன­ருக்கு நன்மை பயக்­கும்.” இது முதல் வரி! இதன் இரண்­டா­வது பகுதி மிக­வும் முக்­கி­ய­மா­னது; நான் மீண்­டும் மேற்­கோள் காட்­டு­கி­றேன்:

“பெரும்­பான்­மை­யி­ன­ராக இருக்­கும் நாமும் (இந்­துக்­கள்) சிறு­பான்­மை­யி­னர் என்ன உணர்­கி­றார்­கள், அவர்­கள் நடத்­தப்­ப­டும் விதத்­தில் நாம் நடத்­தப்­பட்­டால் எப்­படி உண­ரு­வோம் என்­ப­தைப் பற்றி சிந்­திக்­க­வேண்­டும். ஆனால் சில காலத்­திற்கு பிறகு, இந்­த­நாட்­டில் பெரும்­பான்மை, சிறு­பான்மை என்­கிற வேறு­பா­டு­கள் எல்­லாம் மறந்து, இந்­தி­யா­வில் ஒரே ஒரு ‘இந்­தி­யர்­கள்’ என்ற சமூ­கம் மட்­டுமே உள்­ளது என்­கிற எண்­ணத்­திற்கு வந்­து­வி­டு­வதே அனை­வ­ருக்­கும் நல்­லது. இதை கருத்­தில் கொண்டு, ஆலோ­ச­னைக்­கு­ழு­வின் அறிக்­கையை பரி­சீ­லிக்க வேண்­டும் என்று நான் இந்த அவை­யில் முன்­மொ­ழி­கி­றேன்.”

சர்­தார் பட்­டே­லின் மரபை அழிக்க விரும்புகிறீர்கள்!

இது­தான் அன்று அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யில் சர்­தார் வல்­ல­பாய் பட்­டேல் அவர்­க­ளின் குர­லாக ஒலித்­தது. நாம் அர­சி­ய­ல­மைப்­பின் 75வது ஆண்டை கொண்­டா­டு­கி­றோம். இவ்­வாறு உரை­யாற்­றிய நாங்­கள் சர்­தார் பட்­டே­லின் மரபை தொடர விரும்­பு­கி­றோம். அர­சி­ய­ல­மைப்­பில் சர்­தார் பட்­டே­லின் மரபை தொடர விரும்­பும் நாங்­கள் மசோ­தாவை எதிர்க்­கி­றோம், ஆனால் வல்­ல­பாய் பட்­டே­லின் சிலையை மட்­டும் உரு­வாக்­கி­விட்டு அவ­ரு­டைய மரபை அழிக்க விரும்­பு­கிற நீங்­கள் இந்த மசோ­தாவை ஆத­ரிக்­கி­றீர்­கள். இது­தான் வினோ­தம்!

அவைத் தலை­வர் அவர்­களே, இந்த வக்பு சட்­டம் 1954இல் முதன்­மு­த­லில் இயற்­றப்­பட்­டது.

அதன் பிறகு, 1959, 1964 மற்­றும் 1969 இல் திருத்­தப்­பட்­டது. பிறகு 1984இல் விரி­வான திருத்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டது. மாண்­பு­மிகு அமைச்­சர் மற்­றும் முன்­வ­ரி­சை­யில் உள்ள ஆளுங்­கட்­சி­யி­ன­ருக்கு எனது கேள்வி என்­ன­வென்­றால், கடந்த காலங்­க­ளில் திருத்­தங்­கள் இந்த அவை­யில் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போ­தெல்­லாம், அதற்கு ஒரு அடிப்­படை (Basis) இருந்­தது ; விவா­தங்­கள் இருந்­தன; நாடா­ளு­மன்­றத்­தின் ஒப்­பு­த­லின் அடிப்­ப­டை­யில் மட்­டுமே அல்­லது இந்­திய ஜனா­தி­பதி அல்­லது இந்­திய பிர­த­ம­ரின் ஒப்­பு­த­லின் அடிப்­ப­டை­யி­லேயே தொடர்­பு­டைய நிறு­வ­னங்­கள், அமைப்­பு­க­ளு­டன் ஆலோ­ச­னை­கள் நடந்­தன. 1970ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தால் நிய­மிக்­கப்­பட்ட வக்பு விசா­ர­ணைக்­குழு சமர்ப்­பித்த விரி­வான அறிக்­கை­யின்­அ­டிப்­ப­டை­யில் வக்பு (திருத்­தம்) சட்­டம், 1984 நடை­மு­றைக்கு வந்­தது.

14 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு ஏற்­கப்­பட்­டது!

1970 ஆம் ஆண்டு ஒரு குழு அமைக்­கப்­பட்டு, அதன்­அ­றிக்கை 14 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு ஏற்­கப்­பட்­டது, அதன் அடிப்­ப­டை­யில் திருத்­தங்­கள் செய்­யப்­பட்­டன. 1970 ஆம் ஆண்­டின் ஆவ­ணத்­தைப் படித்­த­போது எப்­ப­டிப்­பட்ட ஒரு அரு­மை­யான மற்­றும் விவே­க­மான விவா­தம் இங்கே நடந்­தது என நான்­ஆச்­ச­ரி­யப்­பட்­டேன். அதை­யும் மீறி, 1970 ஆம் ஆண்டு வக்பு சட்­டத் திருத்­தங்­க­ளுக்கு எதி­ராக போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன, பின்­னர், 1984 ஆம் ஆண்டு அந்த திருத்­தங்­கள் நடை­மு­றைக்கு வந்­தன. 1970-ல் இவ்­வ­ளவு பரிந்­து­ரை­கள் செய்­யப்­பட்­டி­ருந்­தா­லும், 1984-ல் நாடா­ளு­மன்­றம் இரண்டு திருத்­தங்­களை மட்­டுமே நடை­மு­றைப்­ப­டுத்த முடிந்­தது; ஒன்று வழக்­கி­டு­வ­தற்­கான கால வரம்பு (Limitation) குறித்­தது. இது வக்பு சொத்­துக்­க­ளுக்கு 30 ஆண்­டு­க­ளாக நீட்­டிக்­கப்­பட்­டது; இரண்­டா­வது கைவி­டப்­பட்ட (Evacuee) சொத்­துக்­க­ளுக்­கும் கூட இச்­சட்­டம் பொருந்­தும் என்­பது. வேறு எந்த திருத்­தங்­க­ளும் செயல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை; இந்­துக்­க­ளின் எதிர்ப்பு கார­ண­மாக அல்ல, மாறாக முஸ்­லிம்­க­ளின் எதிர்ப்பு கார­ண­மாக! இது நேரு­வின் அர­சாங்­கத்­தால் நியா­ய­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

1995–ல் வக்ஃபு சட்டம் நடைமுறைக்கு வந்தது!

அதன்­பி­றகு, 1995 ஆம் ஆண்டு வக்பு சட்­டம் திருத்­தப்­பட்­டது. அமை/ச்­ச­ருக்­கும் இந்த அவைக்­கும் நான் வலி­யு­றுத்த விரும்­பு­வது என்­ன­வென்­றால், இந்த திருத்­தம் நடை­மு­றைக்கு வரும்­போ­தெல்­லாம், நியா­ய­மா­ன­அ­டிப்­ப­டை­யில், சட்ட நிறு­வ­னங்­க­ளால் வழங்­கப்­பட்ட அறி­வு­ரை­கைள் அடிப்­ப­டை­யில், திருத்­தங்­கள் செய்­யப்­பட்­டன. உதா­ர­ண­மாக, 1995 ஆம் ஆண்டு வக்பு சட்­டத்தை எடுத்­துக்­கொள்­ளுங்­கள். 1995 ஆம் ஆண்டு வக்பு சட்­டம் எவ்­வாறு நடை­மு­றைக்கு வந்­தது? 1995 ஆம் ஆண்டு வக்பு சட்­டத்­தின்­படி, ‘குறிக்­கோள்­கள் மற்­றும் கார­ணங்­க­ளின்’ (Reasons and Objects) அறிக்­கை­யின்­பத்தி 2 இல் இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது:

“வக்பு சட்­டத்­தில் விரி­வா­ன­தி­ருத்­தங்­கள், வக்பு (திருத்­தம்) சட்­டம், 1984 முலம் செய்­யப்­பட்­டன; அவை பெரும்­பா­லும் அனைத்து மட்­டங்­க­ளி­லும் வக்­பு­க­ளின் நிர்­வா­கம் குறித்து விசா­ரிக்க டிசம்­பர் 1970 இல் அமைக்­கப்­பட்ட வக்பு விசா­ர­ணைக்­ககுழு­வின் பரிந்­து­ரை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டவை மற்­றும் வக்பு (திருத்த) மசோதா மீதான விவா­தத்­தின் போது உறுப்­பி­னர்­க­ளால் நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கைக்கு பதி­ல­ளிக்­கும்­வி­த­மாக இருந்­தன.” இதன்­படி நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திக்­கப்­பட்ட 1995 ஆம் ஆண்டு வக்பு சட்­டம் நடை­மு­றைக்கு வந்­தது.

அதே­போல் 2013 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட வக்பு சட்­டத்­தின் அடிப்­படை என்ன? அச்­சட்­டத்­தின் ‘கார­ணங்­கள் மற்­றும் நோக்­கங்­க­ளின்’ பத்தி இரண்டை படி­யுங்­கள்:

“இந்­திய முஸ்­லிம் சமூ­கத்­தின் சமூக, பொரு­ளா­தார மற்­றும் கல்வி நிலை­கு­றித்த விரி­வா­ன­ அ­றிக்­கை­யைத் தயா­ரிப்­ப­தற்­காக ஒரு உயர்­மட்­டக்­குழு அமைக்­கப்­பட்­டது, அதன்­அ­றிக்­கையை நவம்­பர் 17, 2006 அன்று பிர­த­ம­ரி­டம் சமர்ப்­பித்­தது, இது ‘சச்­சார்­குழு அறிக்கை’ என்­று­அ­ழைக்­கப்­ப­டு­கி­றது”

எனவே. 1984, 1995, 2013 ஆண்­டு­க­ளில் நிறை­வேற்­றப்­பட்ட சட்ட திருத்­தங்­கள் மூன்­றி­லுமே அடிப்­ப­டை­யான சட்­டக் கார­ணங்­கள் இருந்­தன; விவா­தங்­கள் நடந்­தன; பின்­னர் ஒரு வெள்­ளை­அ­றிக்கை நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டது. ஒரு­மித்த கருத்து எட்­டப்­பட்­டது. பின்­னிட்டு, அர­சாங்­கம் திருத்­தங்­க­ளைக் கொண்டு வந்­தது. நான் கேட்­கி­றேன் தய­வு­செய்து இந்­த­ம­சோதா எந்த அடிப்­ப­டை­யில் சபைக்­குக் கொண்­டு­வ­ரப்­ப­டு­கி­றது என்­ப­தைச் சொல்­லுங்­கள்.

இந்த சட்­டத்தை கொண்­டு­வர வேண்­டிய அவ­சி­ய­மான கார­ணங்­களை உங்­க­ளுக்கு வகுத்­த­ளித்­தது யார் என்று நீங்­கள் கூற முடி­யுமா? எத்­த­னை­அ­மைப்­பு­கள் நாடா­ளு­மன்ற கூட்­டுக் குழு­வில் உங்­கள் கூற்­றுக்­களை உறு­திப்­ப­டுத்­தி­னர்? எவ­ரும் இல்லை. எனவே, இந்த மசோதா கொண்­டு­வ­ரப்­பட்டு செயல்­ப­டுத்­தப்­பட்ட விதம் கள்­ளத்­த­ன­மா­க­வும் கப­ட­மும் கூடி­ய­தாக இருக்­கி­றது. தற்­போ­தைய மசோ­தா­வின் ‘நோக்­கம் மற்­றும் கார­ணங்­க­ளின்­அ­றிக்­கை­யின்’ பத்தி இரண்டு இவ்­வாறு கூறு­கி­றது:

சச்சார் கமிட்டி அறிக்கை!

“ஓய்­வு­பெற்ற நீதி­பதி ராஜீந்­தர் சச்­சார் தலை­மை­யில் உயர்­மட்­டக் குழு­வின் பரிந்­து­ரை­கள், வக்பு மற்­றும் மத்­திய வக்பு கவுன்­சில் மீதான நாடா­ளு­மன்ற கூட்­டுக்­கு­ழு­விள் ்­அ­றிக்­கை­யின்­அ­டிப்­ப­டை­யில், மற்ற அமைப்­பு­க­ளு­டன் விரி­வான ஆலோ­ச­னைக்­குப்­பி­றகு, 2013 ஆம் ஆண்­டில் சட்­டத்­தில் விரி­வான திருத்­தங்­கள் செய்­யப்­பட்­டன.” இது­அ­ர­சாங்­கத்­தின்­ஒப்­பு­தல்!

பிறகு, அதே பத்­தி­யில் என்ன சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது?

“அந்த திருத்­தங்­கள் இருந்­த­போ­தி­லும், வக்பு வாரி­யத்­தின்­அ­தி­கா­ரங்­கள் (Powers of State Boards), பதி­வு­செய்­தல் (Registration), சொத்­துக்­க­ளின் கணக்­கெ­டுப்பு (Survey of properties), ஆக்­கி­ர­மிப்­பு­க­ளை ­அ­கற்­று­தல்­ (Removal of encroachments), வக்பு வரை­யறை (Definition of Waqf) உள்­ளிட்­ட­வை­க­ளில் உள்ள சிக்­கல்­களை திறம்­பட நிவர்த்தி செய்ய சட்­டம் இன்­னும் செம்­மைப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்” என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த ஐந்து கூறு­களை நீங்­கள் குறிப்­பிட்­டுள்­ளீர்­கள். 2013 சட்­டத்­து­டன் சச்­சார் குழு அறிக்கை முந்­தைய சட்­டத்­தில் விடு­பட்­டி­ருந்த ஐந்து கூறு­களை நீங்­கள் மேற்­கொள்ள விரும்­பி­ய­தாக சொன்­னீர்­கள். இப்­போது, இந்த ஐந்து கூறு­க­ளுக்கு வரு­கி­றேன்.

‘வக்ஃபு’ என நீங்கள் வரையறை செய்வது வக்ஃபு இல்லை!

‘வக்பு’ என நீங்­கள் வரை­யறை செய்­வது வக்பு இல்லை, மக்­களை தந்­தி­ர­மாக குழப்­பு ­வ­தைத் தவிர வேறு எது­வும் இல்லை என்­பதை நான் எளி­தாக நிரூ­பிக்­க­மு­டி­யும். ‘ஆக்­கி­ர­மிப்பை அகற்­று­தல்’ என்­பது அர­சாங்­கம், வக்பு சொத்தை அப­க­ரிக்க அர­சுக்கு அதி­கா­ரம் அளிப்­ப­தைத் தவிர வேறில்லை. ‘சொத்­துக்­கள் அளவை கணக்­கெ­டுப்பு’ என்­பது ஒரு கேலிக்­கூத்து. ஏனென்­றால் இந்­திய அரசு ஏற்­க­னவே 90 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மான வக்பு வாரிய சொத்­துக்­களை அளவை செய்து முடிந்­து­விட்­ட ­தாக உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் பிர­மா­ணப்­பத்­தி­ரம் தாக்­கல் செய்­துள்­ளது.

உங்கள் முயற்சியை தோலுரித்துக் காட்டுவேன்!

உங்­கள் உரை­யின்­படி, ‘வக்­பு­ப­திவு’ என்­பது நடை­மு­றை­யில் சாத்­தி­ய­மில்லை. ‘மாநில வக்பு வாரி­யங்­க­ளின்­அ­தி­கா­ரங்­களை’ மேம்­ப­டுத்­து­வது அதை ஒரு கேளிக்கை அரங்­காக மாற்ற முயற்­சிப்­பது!. இந்த குற்­றச்­சாட்­டு­ க­ளின் மூலம் இங்கே உங்­கள் முயற்­சியை தோலு­ரித்­துக் காட்­டு­வேன். ஒரு சட்ட மாண­வ­னாக, இந்த சட்ட திருத்­தங்­க­ளைக் கண்­ட­போது நான் வேத­னை­ய­டைந்­தேன்; மேலும் 2013 ஆம் ஆண்டு சட்­டத்­திற்கு அப்­பால் இந்த ஐந்து தலைப்­பு­க­ளின் அடிப்­ப­டை­யில் ஏதா­வது ஒரு முன்­னேற்­றத்தை இந்த மசோ­தா­வில் காட்­டு­மாறு அமைச்­ச­ரி­டம் உரிய பணி­வு­டன் நான் சவால் விடு­கி­றேன். அவர்­அவ்­வாறு செய்­தால், நான்­அ­வரை வணங்­கத் தயா­ராக இருப்­பேன். ஆனால் நீங்­கள் அதைச் செய்ய முடி­யாது; அது உங்­கள் நோக்­கம் அல்ல. நான் 22 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக நாடா­ளு­மன்­றத்­தில் உறுப்­பி­ன­ராக இருக்­கி­றேன். நாடா­ளு­மன்­றத்­தின் சட்­ட­மி­யற்­றும் முறை­களை நான்­அ­றி­வேன். ஒரு­வ­ழக்­க­றி­ஞ­ராக, அதன்­அ­னைத்து நுணுக்­கங்­க­ளை­யும் நான் நன்­கு­அ­றி­வேன்.

திருட்டுத்தனமாக மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது!

1995 மற்­றும் 2013 ஆம் ஆண்­டு­க­ளில் உரிய விவா­தத்­திற்­குப் பிறகு, அதே நாடா­ளு­மன்­றத்­தின் ஒப்­பு­த­லு­டன் கொண்­டு­வ­ரப்­பட்ட நல்ல திருத்­தங்­களை நீக்­கு­வ­தற்­காக ‘தந்­தி­ர­மா­க­வும்’ ‘அதி­புத்­தி­சா­லித்­த­ன­மா­க­வும்’ அதே நாடா­ளு ­மன்­றத்­தில் திருட்­டுத்­த­ன­மாக இந்த மசோதா கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இந்த கேலிக்­கு­ரிய செயலை நீங்­கள் எப்­போ­தா­வது கண்­டி­ருக்­கி­றீர்­களா?

நீங்­கள் உண்­மை­யி­லேயே நேர்­மை­யா­ன­வ­ராக இருந்­தால், 2013 சட்­டத் திருத்­தத்தை ரத்து செய்­தி­ருக்க வேண்­டும்!. 1995 சட்­டத் திருத்­தத்தை ரத்து செய்­தி­ருக்க வேண்­டும். ஏனெ­னில் 1995 இல் கொண்­டு­வ­ரப்­பட்ட பெரும்­பா­லான திருத்­தங்­கள், பின்­னர் 2013 இல் கொண்­டு­வ­ரப்­பட்ட திருத்­தங்­கள் யாவும் இந்த சட்­டத்­தி­ருத்­தத்­தின் மூலம் முற்­றி­லு­மாக நீக்­கப்­பட்­டுள்­ளன. அதற்கு இதே நாடா­ளு­மன்­றத்தை பயன்­ப­டுத்­து­கி­றீர்­கள்! நாட­றிந்த சட்­ட­வல்­லு­ன­ரான நீதி­ய­ர­சர் வி.ஆர்.கிருஷ்­ண­ஐ­யரை மேற்­கோள் காட்ட விரும்­பு­கி­றேன். அவர் குறிப்­பிட்­டார் “நாடா­ளு­மன்­றம் என்­பது தேசத்­தின் ஒரு சிறந்த விசா­ரணை மையம் Inquest of the Nation), நிர்­வா­கத்­தின் சிறந்த தணிக்­கை­யா­ளர் (Auditor) மற்­றும் குறை­தீர்ப்­பா­ளர் (Ombudsman), இறுதி நடு­வர் (Final Orbitor), கொள்கை கண்­கா­ணிப்­பா­ளர் (Policy Monitor) மற்­றும் மக்­க­ளின் எதிர்­கா­லத்தை வடி­வ­மைக்­கும் கலை­ஞர் Destiny designer)” அப்­ப­டிப்­பட்ட நாடா­ளு­மன்­றம் இன்று வெறும் காற்­றோட்ட மண்­ட­ப­மாக (Ventilating Chamber) மட்­டுமே உங்­க­ளால் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது; குறை மதிப்­பிற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது; என்று நான் அர­சாங்­கத்தை துணி­வு­டன் குற்­றம்­சாட்­டு­றேன். இது அர­சி­ய­ல­மைப்­பின் மீது நடத்­தப்­ப­டும் மன்­னிக்க முடி­யாத படு­கொ­லைத் தாக்­கு­த­லேத் தவிர வேறில்லை; இதற்­காக ஒரு­நாள், நீங்­கள்­வ­ருந்­து­வீர்­கள்!

இப்­போது, மசோ­தா­வின் புதிய சட்­டப்­பி­ரி­வு­களை பற்றி ஆராய்­வோம். திரி­ணா­முல் காரங்­கி­ரஸ் கட்­சி­யின் திரு. கல்­யாண் பானர்ஜி, சமா­ஜவ்hதி கட்­சி­யின் தலை­வர் திரு.அகி­லேஷ் யாதவ் உள்­ளிட்ட எனது நண்­பர்­கள், “குறைந்­தது ஐந்து வரு­டங்­க­ளாக இஸ்­லா­மி­யத்தை கடைப்­பி­டிக்­கும் ஒரு­வர்­தான் வக்பு அமைப்பை ஏற்­ப­டுத்த – நிர்­வ­கிக்க தகு­தி­யா­ன­வர்” என்ற விதி­யைப்­பற்றி குறிப்­பிட்­ட­னர். அது­மட்­டு­மல்ல, யாரும் ‘குறுக்­கு­வ­ழித் தந்­தி­ரத்­தில்’ Contrivance) ஈடு­பட்­டி­ருக்­கக்­கூ­டாது என்­றும் குறிப்­பிட்­டுள்­ளீர்­கள். உங்­க­ளி­டம் இந்த ‘சொல்­லா­டல்­கள்’ எல்­லாம் எங்­கி­ருந்து வந்­தது? நான் சட்­டப்­ப­டி­யான ஒரு இந்து. நான் ஒரு மத நம்­பிக்­கை­யா­ன­வ­னாக இருக்­க­லாம், மத நம்­பிக்­கை­யற்­ற­வ­னா­க­வும் இருக்­க­லாம். ஆனால் என்­னி­டத்­தில் ஒரு சொத்தை ஒப்­ப­டைக்­கும்­போது, என் நேர்­மையை நீங்­கள்­அ­ள­வி­டு­வீர்­களா? என் மத நம்­பிக்­கையை அள­வி­டு­வீர்­களா? நான் நேர்­மை­யைப் பற்றி அக்­கறை இல்­லாத ஒரு மோசடி செய்­ப­வன் என்­றால், அதை ஏற்­பீர்­களா? நீங்­கள் நேர்மை மற்­றும் வெளிப்­ப­டைத்­தன்மை பற்றி ஒரு­போ­தும் கவ­லைப்­ப­டு­வ­தில்லை. நீங்­கள் மதத்­தைப்­பற்றி மட்­டுமே கவ­லைப்­ப­டு­கி­றீர்­கள். அது­தான் உங்­கள் பிரச்­சனை. வேறு எந்த நாட்­டின் சட்­டத்­தி­லும் இது­போன்ற ஒரு­வி­தியை நான்­பார்த்­த­தில்லை. ஒரு­வ­ரின் நேர்­மையை நீங்­கள் எப்­படி மத அடிப்­ப­டை­யில் அள­விட முடி­யும்?

(குறுக்­கீ­டு­கள்)

தயா­நிதி மாறன்: (மத்­திய சென்னை எம்.பி): பேர­வைத் தலை­வர் அவர்­களே, அதிக குறுக்­கீ­டு­கள் உள்­ளன. நாடா­ளு­மன்ற கூட்­டுக்­கு­ழு­ வில்­கூட அவ­ரால் பேச­மு­டி­ய­வில்லை.

(குறுக்­கீ­டு­கள்)

ஆ.இராசா: அர­சாங்­கம் தொடங்­கி­யி­ருக்­கும் இந்த சட்­டத்­தி­ருத்த முயற்­சி­யில் கெட்ட உள்­நோக்­கம் இல்லை என நீங்­கள் கூறி­னீர்­கள்; ஆனால் உங்­கள் முழு முயற்­சி­யும், ஒரு கொடூ­ர­மான திட்­ட­மிட்ட சூழ்ச்சி (Diabolical contrivance), அரு­வ­ருப்­பா­னது என்­ப­தைத்­த­விர வேறில்லை என்று நான் குற்­றம் சாட்­டு­கி­றேன். பிறகு நீங்­கள் சில புதிய வாக்­கி­யங்­க­ளைச் இந்த சட்­டத்­தி­ருத்­தத்­தின் பிரிவு 3ஏ வில் சேர்த்­துள்­ளீர்­கள். உண்­மை­யான மற்­றும் அசல் உரி­மை­யா­ளர் ஒரு­வர் மட்­டுமே தன் சொத்தை ‘வக்­பு’க்கு தானம் செய்ய முடி­யும் என்று இதில் கூறப்­பட்­டுள்­ளது. இது என்ன நகைப்­பாக இல்­லையா? உரி­மை­யா­ளர் மட்­டுமே சொத்­துக்­களை விற்க - மாற்ற முடி­யும். உரிமை அல்­லாத ஒரு­வர் சொத்தை மாற்­றி­னால், அது மாற்­ற­மா­காது, அது சட்­டப்­படி செல்­லாது. நான் என் சொந்த பணத்தை செல­விட முடி­யும், ஆனால் நான் என் நண்­ப­னி­ட­மி­ருந்து பணத்தை பறித்­துக் கொண்­டால், அது திருட்­டுத்­த­ன­மா­னது. நீங்­கள் ஏன் இப்­படி ஒரு சட்­டப்­பி­ரி­வைக் கொண்டு வரு­கி­றீர்­கள்? எனக்கு அதைப்­பு­ரிந்து கொள்ள முடி­ய­ வில்லை. (சிரிப்­பலை)

(குறுக்­கீ­டு­கள்)

அவை தலைவர் அவர்களே, இந்த மசோதாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டத்திருத்தங்கள் அனைத்தும் சிக்கலானவை. அவைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மசோதாவின் பிரிவு 3சி கூறுகிறது, இந்தச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ வக்பு சொத்தாக அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட எந்தவொரு அரசாங்க சொத்தும் வக்பு சொத்தாகக் கருதப்படாது” என்று. இந்த அவையில் எத்தனை வழக்கறிஞர்கள் உள்ளனர் என்பது எனக்குத்தெரியாது. அரசாங்க சொத்து எவ்வாறு வக்பு சொத்தாக அறிவிக்கப்

பட்டிருக்க முடியும்? அதை யார்அடையாளம் காட்டுவார்கள்? யார்அறிவிப்பார்கள்? யார் விசாரிப்பார்கள்? எதுவும் தெளிவாக இல்லை; ஆனால் நீங்கள் அறிவிப்பீர்கள் இந்தச் சொத்தை அரசினுடையது என்று. அரசாங்கம் அடையாளம் காண்பிக்கும்! அதற்குமேல் அதை வக்பு சொத்தாகக் கருதப்படாது.

இது மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள தன்னிச்சையான சிறப்பு அதிகாரம் ! நிச்சயமாக, அனைத்து அரசியலமைப்பு அமைப்புகளுக்கும் சில தன்னிச்சையான உரிமை (Discretionary power) உள்ளது. நீதியரசர் பதஞ்சலி 1960 களில் கூறினார்: ஆம், எங்களுக்கு நீதித்துறையில் சில தன்னிச்சையான உரிமை உள்ளது; ஆனால் அது ஒரு குகை மனிதனின் உரிமையாக (Caveman discretion) இருக்கக்கூடாது”. இங்கே உங்கள் தன்னிச்சை உரிமை ஒரு குகை மனிதனின் உரிமை!. சட்டத்தை செம்மைப் படுத்துகிறோம் என்ற பெயரில், அரசாங்கம் வக்பு என்ற கருத்தை தோற்கடிக்க முயற்சி செய்கிறது, சட்டத்தின் பெயரில் முழு வக்பு சொத்துக்களையும் அரசாங்கம் இசுலாமியர்களிடமிருந்து பறிக்க நினைக்கிறது !.

ஒரு ஆட்சியர் தனது வழக்கை

தானே நீதிபதியாக இருந்து விசாரிக்க முடியுமா?

இரண்டாவதாக, ‘வக்பு சொத்துக்களின் கணக்கெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல்’ பற்றிய பிரிவுகளில் நிறைய முரண்பாடடுகள் உள்ளன. சொத்தின் கணக்கெடுப்பை உறுதிப்படுத்துவதும்; வக்பு சொத்தின் ஆக்கிரமிப்பு அகற்றுவதும் எதிர்மறையானது. அதை ஒன்றாக இணைக்க நீங்கள் விரும்புகிறீர்கள். தற்போதைய சட்டத்தில் பிரிவு 4 இல் வக்பு சொத்தை கணக்கெடுப்ப தற்கான ஒரு ஏற்பாடு உள்ளது. அரசாங்கத்தைச் சாராத ஒரு தன்னுரிமை கொண்ட அளவை ஆணையர் (Independent Survey Commissioner) இச்சட்டத்தில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு அரசுக்கு கட்டுப்பட்ட அதிகாரி அல்ல. அரசாங்கத்திற்கும் வக்பு வாரியத்திற்கும் ஒரு தகராறு வரும்போது, அவர்களின் உரிமைகளை விசாரித்து ஒரு முடிவுக்கு வர உரிமையியல் நடைமுறைச் சட்டத்தை (Civil Procedure Code)பின்பற்றி நடக்கும் ஒரு சார்பற்ற அதிகாரி ஆவார். அவர் ஒரு உரிமையியல் நீதிமன்றமாகவே (Civil Court) செயல்பட வேண்டும்.

இப்போது, இந்த திருத்தத்தில் நில அளவை ஆணையருக்கு பதில் ‘மாவட்டஆட்சியர்’ (Collector) பணியமர்த்தப்பட்டுள்ளார். எனது கேள்வி இதுதான். வக்பு வாரியத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான எந்தவொரு தகராறிலும், ஒரு ஆட்சியர் எப்படி நீதிபதியாக இருக்கமுடியும் ? இயற்கை நீதியின் (Natural Justice) கொள்கை உங்களுக்குத் தெரியுமா? யாரும் தங்கள் சொந்த விஷயத்தில் தாங்களே நீதிபதியாக இருக்க முடியாது (No one can be a judge for his own cause). அதே ஆட்சியர் அமர்ந்து சொத்தின் உரிமையாளர் அரசாங்கமா அல்லது வக்பு வாரியமா என்பதை முடிவு செய்கிறார். இது சட்ட முறை (Jurisprudence) அறியாதது, எதிரானது. சட்டத்துறையினரும் ஏற்காத ஒன்று. ஒரு ஆட்சியர் தன் வழக்கை தானே நீதிபதியாக இருந்து எவ்வாறு விசாரிக்க முடியும்?

இந்த மசோதா ஆக்கிரமிப்பை

மீண்டும் ஆய்வு செய்ய விரும்புகிறது!

அடுத்து, இந்த மசோதா ஆக்கிரமிப்பை மீண்டும் ஆய்வு செய்ய விரும்புகிறது. நில அளவை கணக்கெடுப்பு முடிந்து விட்டது; இப்போது அடுத்ததாக ஆக்கிரமிப்புக்கு வருகிறது. நீங்கள் இச்சட்ட முன்வடிவின் ‘நோக்கங்கள் மற்றும் காரணங்கள்’ (Reasons and Objects) அடிப்படையில் ஆக்கிரமிப்பை மீண்டும் ஆய்வு செய்ய விரும்புவதாக குறிப்பிட்டீர்கள். ஆனால், வக்பு சட்டம் பிரிவு 54 ஆக்கிரமிப்பை குறிக்கிறது, தயவு செய்து மசோதாவை பாருங்கள். ஒரு சிறிய மாற்றம் இப்பிரிவில் கொண்டு வரப்பட்டுள்ளதா? நீங்கள் பிரிவு 54 இல் ஒரு காற்புள்ளி, அரைப்புள்ளியைகூட மாற்றவில்லை. ஆனால் நீங்கள் ‘நோக்கங்கள் மற்றும் காரணங்கள்’ என்று சொல்லும்போது இந்த மசோதாவில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என்று கூறுகிறீர்கள். அதற்கு முற்றிலும் மாறாக, எனது நண்பர் கூறியபடி, நீங்கள் நாட்டின் சிறுபான்மையினர்களுக்காக கடுமையான சட்டங்களை உருவாக்க விரும்புகிறீர்கள். ஆனால் உங்கள் கூற்றில் சிறிதும் உண்மை இல்லை.

தீர்ப்பாயங்களைப் பற்றிக்

குறிப்பிட விரும்புகிறேன்!

ஏனெனில், தற்போதைய சட்டத்தின்படி வக்பு சொத்துகளுக்கு எதிராக குற்றமிழைத்தால் ‘கடுமையான சிறை மற்றும் அபராதத்தை’ (Rigorous imprisonment and penalty) விதிக்கவல்லது. நீங்கள் இதனை ‘எளிமையான சிறைதண்டனை’ (Simple imprisonment) என்று மாற்றியுள்ளீர்கள். தற்போது இந்தச் சட்டத்தில் செய்யப்பட்ட குற்றம் உடனடியாக புலன் விசாரணை நடவடிக்கை எடுக்கத்தக்க மற்றும் பிணையில் வெளிவர முடியாததாக (Cognizable and non bailable) இருக்கின்றது . நீங்கள் அதை பிணை வழங்கும் வகையில் (Bailable) மாற்றி அப்பிரிவை நீர்த்துப் போகச் செய்துள்ளீர்கள்!

நான் தீர்ப்பாயங்களை (Tribunal) பற்றி குறிப்பிட விரும்புகிறேன். ஒரு வழக்கறிஞராக, நான் மீண்டும் கூறுகிறேன்; நீதிமன்றங்களை உரிமையியல், உயர் மற்றும் உச்ச நீதிமன்றம் என பிரித்துள்ளோம். நீதிமன்றங்களின் நீண்ட தாமதப்படுத்தும் விசாரணை வழக்கங்களை தவிர்க்கவே நாம் தீர்ப்பாயங்களை உருவாக்கி யிருக்கிறோம். நாம் பல தீர்ப்பாயங்களை கொண்டுள்ளோம். தொலைத் தொடர்பு தீர்ப்பாயம் உள்ளது. வருமான வரி தீர்ப்பாயம் உள்ளது. காரணம் என்ன? உரிமையியல் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், கீழ் நிலை நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் பல வழக்குகள் குவிந்து கிடக்கின்றன. இந்த தனித்த சிறப்பான துறைகளின் வழக்குகளை தீர்க்கவும், கால நீட்டிப்பு சவால்களை தீர்க்கவும் குறிப்பிட்ட தீர்ப்பாயங்களை நிறுவப்பட வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில்தான், அரசியலமைப்பு சட்டம் தீர்ப்பாயங்களை உருவாக்க அனுமதிக்கின்றது.

இச்சட்டத்தில் ஏற்கனவே, ஒரு தீர்ப்பாயத்தை உருவாக்கி, அதன் தீர்ப்புதான் இறுதி (Tribunal decision is final) என்று தெளிவாக சட்டத்தில் உள்ளது. ஏன் அது இறுதியாக இருக்க வேண்டும்? ஏற்கனவே நில அளவை ஆணையர், உரிமையியல் நீதிமன்றங்களின் அதிகாரங்களை பெற்றுள்ளார். அவர் தனிப்பட்ட நபர் அல்ல. அவர் சட்டத்தின் கீழ் ஒரு நீதி நிறுவனம். அவர் உரிமையியல் சட்ட விதிகளின்படி (CPC) மற்றும் பழைய இந்திய சாட்சிய சட்டப்படியும் அவைகளை பின்பற்றி தீர்ப்பளிக்கிறார்; எனவே, நில அளவையரே முதல் முதல் நீதிமன்றம். இரண்டாவது, மேல் முறையீடு செய்ய இந்த தீர்ப்பாயங்கள் உள்ளன. மூன்றாவது, சீராய்வு சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அது உயர் நீதிமன்றங்களுக்கு செல்ல முடியும். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

(குறுக்கீடுகள்)

ஆனால் நீங்கள் தீர்ப்பாயம் சொல்வது இறுதி அல்ல என்கிறீர்கள் என்றால் என்ன வகையான சட்டவியல் நடைமுறைகளை (Jurisprudence) நீங்கள் பின்பற்றுகிறீர்கள்? இப்போது, வக்பு அமைப்புகளை பதிவு செய்வதில் உள்ள பிரச்சினையை பிரிவு 36(1) இல் காணலாம். முன்னர், வக்பு சொத்துக்கள், உரிய விசாரணைக்குப் பிறகு, 36(1) பிரிவின்படி வக்பு சொத்தாக அறிவிக்கப்படலாம். அந்த செயல்முறை என்ன என்பதை தெளிவாக இச்சட்டத்தில் ஏற்கனவே உள்ளது. இப்போது, நீங்கள் அதில் உட்பிரிவு 7ஏ பிரிவை கொண்டு வர விரும்புகிறீர்கள். 7ஏ பிரிவு என்ன கூறுகிறது? இது ஒரு தனித்துவமான பிரிவு, இது அனைத்து வக்பு சொத்துக்களையும் அழிப்பதாக இருக்கும். தயவு செய்து எனக்கு 7ஏ பிரிவை வாசிக்க அனுமதி அளியுங்கள்.

வக்பு சொத்தின் மீது இருக்கும் பிரச்சனையை ஒரு தகுதி வாய்ந்த நீதிமன்றத்தால் தீர்க்கப்டும்வரை, அந்த சொத்தை வக்பு வாரிய சொத்தாக பதிவு செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வக்பு சொத்தாக ஒரு சொத்தை பதிவு செய்யும் முறையில், எந்தவொரு பிரச்சினையும் மாவட்ட ஆட்சியருக்கு தெரிய வந்தால், அதில் இறுதி முடிவு எடுக்கப்படாது. அது நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்படும், அதுவரை, அது அரசின் சொத்தாகவே இருக்கும். பின்பு, 10ஆம் உப பிரிவு கூறுகிறது, இந்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் வழக்கோ, மேல் முறையீடோ செய்ய முடியாது என்று !. இதன் பொருள் என்ன ? வக்பு சொத்தில் பிரச்சினை இருந்தால் வழக்கு உச்ச நீதிமன்றம் வரையில் செல்லும். தீர்ப்பிற்கு 30 ஆண்டுகள் ஆகும். அதுவரையில் அந்த சொத்து அரசின் சொத்தாகக் கருதப்படும். இதன் பொருள் என்ன? வக்பு வாரிய சொத்துக்களை அரசு எடுத்துக் கொள்ளப்போகிறது. அதேபோல் பதிவு செய்யும் முறையும் உள்ளபடியே மிகவும் கடினமாக இருக்கின்றது.

எங்களுக்குப் பாடம் கற்பிக்காதீர்கள்!

வக்பு வாரியங்களின் அமைப்பை (Boards) பொருத்தவரை இஸ்லாமியர் அல்லாதவர்களை எதற்காக உள்ளே உறுப்பினராக கொண்டு வந்துள்ளீர்கள்? தமிழ்நாடு உள்படஅனைத்து மாநிலங்களிலும், இந்து அறநிலையத் துறை உள்ளது. தமிழ்நாட்டில் என்ன நடந்தது? ஒரு கோவிலில், அறநிலையத்துறையின் உள்ள பல ஏக்கர் நிலம் மூலம் வந்த வருமானத்திலிருந்து, அறநிலையத்துறை ஒரு கலைக் கல்லூரி நடத்த முடிவு செய்தது. பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டபோது ஒரு இஸ்லாமியர் தகுதி அடிப்படையில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டார். உடனடியாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னனி அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டது: இது இந்துக்கள் சொத்து. நீங்கள் ஏன் ஒரு இஸ்லாமிய பேராசிரியரை அமர்த்துகிறீர்கள் ?” என்று!. இப்போது, சொத்தும் மதமும் வேறு வேறு என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். அதேபோல் மதமும் அரசியலும் வேறு வேறு ; இரண்டையும் கலக்காதீர்கள் என்று நாங்கள் சொல்கிறோம். தயவு செய்து எங்களுக்கு பாடம் கற்பிக்காதீர்கள். இந்த நாட்டை மதசார்பற்ற ஒருமைப்பாடு கொண்டதாக பேணிட அரசியலை மதத்திலிருந்து பிரித்து விடுங்கள்.

இப்போது, மசோதாவின் 40ஆம் பிரிவு மிகவும் முக்கியமானது. இந்திய அறக்கட்டளைகள் சட்டம் (Trust Act) அல்லது சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (Societies Registration Act) கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு சொத்து அது வக்பு சொத்தாக இருப்பதாக தெரிய நேரிட்டால், வாரியம் அந்த சொத்து தொடர்பான விசாரணையை மேற்கொண்டு , அது வக்பு சொத்து என முடிவு செய்யலாம். இந்த விதியை நீக்குவதன் காரணம் என்ன ? நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இது குறித்து ஒருபோதும் விவாதிக்கப்படாதபோது நீக்குவதற்கான அதிகாரத்தை யார் அளித்தார்கள் ?

இறுதியாக, பிரிவு 108(ஏ) வக்பு வாரிய சட்டத்திற்கான சிறப்பு மற்றும் கட்டுப்படுத்த முடியாத (Over riding powers) அதிகாரம் குறித்து பேசுகிறது. பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) அல்லது வரதட்சணை தடைச் சட்டம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், இவைகளைப் போல் சிறப்புச் சட்டங்கள் (Special Legislation) இயற்றப்படுவது குறிப்பிட்ட உரிமைகள் மறுதலிக்கவல்ல பிரிவுகளை பாதுகாக்க இதுபோன்ற சட்டங்களை சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டால், மற்ற சட்டங்கள் அவற்றை கட்டுப்படுத்த கூடாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்க இப்படிப்பட்ட சிறப்பு அதிகாரம் இருக்க வேண்டும். ஆனால், நீங்கள்அதை நீக்குகிறீர்கள்.

அன்றே பிரதமர் நேரு எச்சரித்தார்!

நிறைவாக, உங்களுக்கு கவனப்படுத்துகிறேன். சுதந்திரத்திற்குப் பிறகு, அப்போதைய இந்தியாவின் பிரதமர்அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதினார். அப்போதைய பிரதமர் முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தின் அதிகாரப்பூர்வ பதிவிலிருந்து நான் மேற்கோள் காட்டுகிறேன்:

தனியார் இராணுவத்தின் இயல்பில் இருக்கும் ஒரு அமைப்பு, நிச்சயமாக கடுமையான நாஜிவழிகளைப் பின்பற்றுகிறது, நாஜி அமைப்பின் நுட்பத்தைப் பின்பற்றுகிறது என்பதற்கு எங்களிடம் ஏராளமான சான்றுகள் உள்ளன. நாஜிகட்சி ஜெர்மனியை அழிவுக்கு இட்டுச் சென்றது. இந்தப் போக்குகள் இந்தியாவில் பரவி அதிகரிக்க அனுமதிக்கப்பட்டால், அவை இந்தியாவுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்றாலும் இந்தியா உயிர்ப்போடு நிற்கும்! என அய்யமின்றி நம்பலாம். ஆனால் இந்தியா மோசமான காயங்களை அடைந்திருக்கும்; மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும்.” என எச்சரித்தார் தேசத்தின் பிரதமர் 1948 ல் !

யார் அந்த பிரதமர் ? அது பண்டிட் ஜவஹர்லால் நேரு!.

எந்த அமைப்பை பற்றி சொன்னார் ? ஆர்.எஸ்.எஸ்!

இந்தஅரசாங்கத்தை நான் எச்சரிக்கிறேன், ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைந்து பயணிக்காதீர்கள்; தேசத்திற்கு நல்லதல்ல. நன்றி.

இவ்வாறு ஆ.இராசா அவர்கள் உரையாற்றினார்

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்