முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்!

தமிழ்­நாடு அர­சுப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யம் மற்­றும் மருத்­து­வப் பணி­யா­ளர் தேர்வு வாரி­யத்­தால் பல்­வேறு பணி­யி­டங்­க­ளுக்கு தெரிவு செய்­யப்­பட்ட 621 நபர்­க­ளுக்கு பணி­நி­ய­மன ஆணை­களை – முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் வழங்­கி­னார்.

தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் நேற்று (4.4.2025) தலை­மைச் செய­ல­கத்­தில், பால்­வ­ளத்­துறை சார்­பில் 64 நபர்­க­ளுக்­கும், கைத்­தறி மற்­றும் துணி­நூல் துறை சார்­பில் 166 நபர்­க­ளுக்­கும், மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை சார்­பில் 391 நபர்­க­ளுக்­கும், என மொத்­தம் 621 பணி­யி­டங்­க­ளுக்கு தமிழ்­நாடு அர­சுப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யம் மற்­றும் மருத்­து­வப் பணி­யா­ளர் தேர்வு வாரி­யத்­தால் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு பணி­நி­ய­மன ஆணை­களை வழங்­கி­டும் அடை­யா­ள­மாக 13 நபர்­க­ளுக்கு பணி­நி­ய­மன ஆணை­களை வழங்­கி­னார்.

தமிழ்­நாடு அர­சின் 2025–26–ஆம் ஆண்­டிற்­கான நிதி­நிலை அறிக்­கை­யில், 40,000 பணி­யி­டங்­கள் நடப்பு நிதி ஆண்­டி­லேயே நிரப்­பும் பொருட்டு உரிய நட­வ­டிக்­கை­களை அரசு துரி­த­மாக மேற்­கொள்­ளும் என்ற அறி­விப்­பிற் கிணங்க, முத­ல­மைச்­சர் அவர்­கள் இன்­றைய தினம் 621 நபர்­க­ளுக்கு பணி­நி­ய­மன ஆணை­களை வழங்­கி­னார்.

பால்­வ­ளத் துறை­யில்

பணி­நி­ய­மன ஆணை­கள்!

கால்­நடை பரா­ம­ரிப்பு, பால்­வ­ளம், மீன்­வ­ளம் மற்­றும் மீன­வர் நலத்­து­றை­யின் 2021–2022–ஆம் ஆண்­டிற்­கான மானி­யக் கோரிக்­கை­யில், ஆவின் நிறு­வ­னத்­தில் சிறப்­பான முறை­யில் வெளிப்­ப­டைத் தன்­மை­யு­டன் பணி நிய­ம­னம் செய்­வ­தற்கு, தமிழ்­நாடு அர­சுப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யம் மூல­மாக தேர்வு செய்ய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டது. அதன்­படி, தமிழ்­நாடு அர­சுப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யத்­தால் கடந்த மே 2021 முதல் இது­வரை, செயற்­ப­ணி­யா­ளர் (கட்­டு­மா­னம்) பத­விக்கு 3 நபர்­க­ளும், மேலா­ளர் (கால்­நடை மருத்­து­வம்) பத­விக்கு

23 நபர்­க­ளும், மேலா­ளர் (நிதி) பத­விக்கு 13 நபர்­க­ளும், மேலா­ளர் (பொறி­யி­யல்) பத­விக்கு 7 நபர்­க­ளும், மேலா­ளர் (கட்­டு­மா­னம்) பத­விக்கு

1 நப­ரும், என மொத்­தம் 47 நபர்­கள் தேர்வு செய்­யப்­பட்டு, தமிழ்­நாடு பால் உற்­பத்­தி­யா­ளர்­கள் கூட்­டு­றவு இணை­யம் மற்­றும் மாவட்ட பால் உற்­பத்­தி­யா­ளர்­கள் கூட்­டு­றவு ஒன்­றி­யங்­க­ளில் பணி­யாற்­றிட பணி நிய­மன ஆணை­கள் வழங்­கப்­பட்டு பணி­பு­ரிந்து வரு­கின்­ற­னர்.

மேலும், தமிழ்­நாடு பால் உற்­பத்­தி­

யா­ளர்­கள் கூட்­டு­றவு இணை­யத்­தில் பணி­பு­ரிந்து வெவ்­வேறு காலக்­கட்­டங்­க­ளில் உயிர்­நீத்த 64 பணி­யா­ளர்­க­ளின் சட்­டப்­பூர்­வ­மான வாரி­சு­தார்­க­ளுக்கு கருணை அடிப்­ப­டை­யில் இள­நிலை செயற்­ப­ணி­யா­ளர் (அலு­வ­ல­கம்) மற்­றும் முது­நிலை தொழிற்­சாலை உத­வி­யா­ளர் பத­வி­க­ளில் பணி­யாற்­றிட பணி­நி­ய­மன ஆணை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ரசு பொறுப்­பேற்ற மே 2021 முதல் இது­வரை மொத்­தம் 111 நபர்­கள் பணி­நி­ய­மன ஆணை­கள் பெற்று பய­ன­டைந்­துள்­ள­னர்.

புதி­தாக தெரிவு செய்­யப்­பட்ட

64 நபர்­க­ளுக்கு பணி நிய­மன ஆணை­கள்

பால்­வ­ளத் துறை சார்­பில் தமிழ்­நாடு பால் உற்­பத்­தி­யா­ளர்­கள் கூட்­டு­றவு இணை­யம் மற்­றும் மாவட்ட பால் உற்­பத்­தி­யா­ளர்­கள் கூட்­டு­றவு ஒன்­றி­யங்­க­ளில் பணி­பு­ரிந்­திட தமிழ்­நாடு அர­சுப்­ப­ணி­யா­ளர் தேர்­வா­ணை­யத்­தின் வாயி­லாக இள­நிலை செயற்­ப­ணி­யா­ளர் (அலு­வ­ல­கம்) பணி­யி­டத்­திற்கு 29 நபர்­கள், பால் அள­வை­யா­ளர் நிலை–III பணி­யி­டத்­திற்கு 11 நபர்­கள் மற்­றும் முது­நிலை தொழிற்­சாலை உத­வி­யா­ளர் பணி­யி­டத்­திற்கு 24 நபர்­கள், என மொத்­தம் 64 நபர்­கள் தெரிவு செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு பணி­நி­ய­மன ஆணை­களை வழங்­கி­டும் அடை­யா­ள­மாக தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் இன்­றை­ய­தி­னம் 3 நபர்­க­ளுக்கு பணி­நி­ய­மன ஆணை­களை வழங்­கி­னார்.

கைத்­தறி மற்­றும் துணி­நூல் துறை­யில் பணி­நி­ய­மன ஆணை­கள்

கைத்­தறி மற்­றும் துணி­நூல் துறை சார்­பில், கோ–ஆப்­டெக்ஸ் விற்­பனை பிரி­வில் பணி ஓய்­வின் கார­ண­மாக நில­வும் பணி­யா­ளர்­கள் பற்­றாக்­கு­றை­யினை நிவர்த்தி செய்­ய­வும், கோ–ஆப்­டெக்ஸ் விற்­பனை நிலை­யங்­க­ளில் கைத்­தறி இர­கங்­க­ளின் விற்­ப­னையை அதி­கப்­ப­டுத்­தும் நோக்­கி­லும், தமிழ்­நாடு அர­சுப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யத்­தின் மூலம் 90 ஆண் பணி­யா­ளர்­கள் மற்­றும் 76 பெண் பணி­யா­ளர்­கள், என மொத்­தம் 166 உதவி விற்­ப­னை­யா­ளர் பணி­யி­டத்­திற்கு தேர்வு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு பணி­நி­ய­மன ஆணை­களை வழங்­கி­டும் அடை­யா­ள­மாக தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் இன்­றை­ய­தி­னம் 5 நபர்­க­ளுக்கு பணி­நி­ய­மன ஆணை­களை வழங்­கி­னார்.

மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை­யில் பணி­நி­ய­மன ஆணை­கள்

மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை­யில் அவ்­வப்­போது ஏற்­ப­டும் காலிப் பணி­யி­டங்­களை இவ்­வ­ரசு உட­னுக்­கு­டன் நிரப்பி வரு­கி­றது. தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யி­லான அரசு பொறுப்­பேற்ற மே 2021 முதல் இது­நாள் வரை மருத்­து­வப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யத்­தின் வாயி­லாக மருந்­தா­ளு­நர்­கள், உதவி மருத்­து­வர் (பொது), உதவி மருத்­து­வர் (சிறப்பு தேர்வு), ஆய்­வக நுட்­பு­நர், இருட்­டறை உத­வி­யா­ளர், களப்­பணி உத­வி­யா­ளர், இரத்த சுத்­தி­க­ரிப்பு தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர் உள்­ளிட்ட பல்­வேறு பணி­யி­டங்­க­ளுக்கு மொத்­தம் 7346 நபர்­க­ளுக்கு பணி நிய­மன ஆணை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், தமிழ்­நாடு அர­சுப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யத்­தின் மூல­மாக இள­நிலை உத­வி­யா­ளர், உத­வி­யா­ளர், தட்­டச்­சர், சுருக்­கெ­ழுத்­து–­தட்­டச்­சர் ஆகிய பணி­யி­டங்­க­ளுக்கு மொத்­தம் 1393 நபர்­க­ளுக்கு பணி­நி­ய­மன ஆணை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது. அத்­து­டன் கருணை அடிப்­ப­டை­யில் இள­நிலை உத­வி­யா­ளர், தட்­டச்­சர் பணி­யி­டங்­க­ளுக்கு 133 நபர்­க­ளுக்கு பணி­நி­ய­மன ஆணை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ரசு பொறுப்­பேற்ற மே 2021 முதல் இது­வரை 8872 நபர்­க­ளுக்கு பணி­நி­ய­மன ஆணை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது.

புதி­தாக தெரிவு செய்­யப்­பட்ட

391 நபர்­க­ளுக்கு பணி நிய­மன ஆணை­கள்

மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை சார்­பில் மருத்­து­வப் பணி­யா­ளர் தேர்வு வாரி­யத்­தால் 74 இ.சி.ஜி. தொழில்­நுட்ப வல்­லு­நர் பணி­யி­டத்­திற்­கும், 44 இயன்­முறை சிகிச்­சை­யா­ளர் பணி­யி­டத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­கும், தமிழ்­நாடு அர­சுப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யத்­தால் 205 இள­நிலை உத­வி­யா­ளர் மற்­றும் 68 தட்­டச்­சர் பணி­யி­டங்­க­ளுக்கு தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் பணி­நி­ய­மன ஆணை­களை வழங்­கி­டும் அடை­யா­ள­மாக தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் இன்­றை­ய­தி­னம் 5 நபர்­க­ளுக்கு பணி­நி­ய­மன ஆணை­களை வழங்­கி­னார்.

இந்த நிகழ்ச்­சி­யில், பால்­வ­ளத்­துறை அமைச்­சர் ஆர்.எஸ்.ராஜ­கண்­ணப்­பன், கைத்­தறி மற்­றும் துணி­நூல் துறை அமைச்­சர் ஆர்.காந்தி, மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், தலை­மைச் செய­லா­ளர் நா. முரு­கா­னந்­தம், மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை முதன்­மைச் செய­லா­ளர் முனை­வர் ப.செந்­தில்­கு­மார், கைத்­தறி, கைத்­தி­றன், துணி­நூல் மற்­றும் கதர்த்­துறை செய­லா­ளர் திரு­மதி. வே. அமு­த­வல்லி, கால்­நடை பரா­ம­ரிப்பு, பால்­வ­ளம், மீன்­வ­ளம் மற்­றும் மீன­வர் நலத்­து­றைச் செய­லா­ளர் மருத்­து­வர் ந.சுப்­பை­யன், பால் உற்­பத்தி மற்­றும் பால்­பண்ணை மேம்­பாட்­டுத் துறை ஆணை­யர் / ஆவின் நிர்­வாக இயக்­கு­நர் ஆ.அண்­ணா­துரை, கோ–ஆப்­டெக்ஸ் மேலாண்மை இயக்­கு­நர் தீபக் ஜேக்­கப் மற்­றும் அரசு உயர் அலு­வ­லர்­கள் கலந்து கொண்­ட­னர்

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்