வேலூர் – இராணிப்பேட்டை மாவட்டங்களின் – அரசுப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் வேலூர் மற்­றும் இரா­ணிப்­பேட்டை மாவட்­டங்­க­ளின் ஆய்­வுக் கூட்­டத்­தின்­போது, பொது­மக்­க­ளுக்­காக சிறப்­பாக சேவை­யாற்­றிய அரசு அலு­வ­லர்­க­ ளுக்கு பாராட்­டுச் சான்­றி­தழ் மற்­றும் கேட­யங்­களை வழங்­கி­னார்.

துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யில் வேலூர் மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கக் கூட்­ட­ரங்­கில் வேலூர் மற்­றும் ராணிப்­பேட்டை மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த அனைத்து அரசு துறை­க­ளின் சார்­பாக செயல்­ப­டுத்­தப்­பட்டு வரும் வளர்ச்­சித் திட்­டப் பணி­கள் குறித்த ஆய்­வுக் கூட்­டம் 6.12.2024 அன்று நடை­பெற்­றது.

இக்­கூட்­டத்­தில் துணை முத­ல­மைச்­சர் அவர்­கள், முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் சிறப்­புத் திட்­டங்­க­ளான முதல்­வ­ரின் முக­வரி, மக்­க­ளு­டன் முதல்­வர் திட்­டம், கலை­ஞர் நகர்ப்­புற மேம்­பாட்­டுத் திட்­டம், குடி­நீர் திட்­டப் பணி­கள், மக்­க­ளைத் தேடி மருத்­து­வம், முத­ல­மைச்­ச­ரின் விரி­வான மருத்­து­வக் காப்­பீட்­டுத் திட்­டம், இன்­னு­யிர் காப்­போம் - –நம்­மைக் காக்­கும் 48 திட்­டம், கலை­ஞர் கனவு இல்­லத் திட்­டம், சாலை மேம்­பாட்­டுப் பணி­கள் உள்­ளிட்ட பல்­வேறு திட்­டங்­கள் குறித்து விரி­வாக ஆய்வு மேற்­கொண்­டார்.

இந்த ஆய்­வுக் கூட்­டத்­தின்­போது, பொது­மக்­க­ளின் கோரிக்கை மனுக்­க­ளின்­மீது எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் குறித்து திடீ­ராய்வு மேற்­கொண்டு, வேலூர் மற்­றும் இரா­ணிப்­பேட்டை மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த மனு­தா­ரர்­க­ளி­டம் அலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு அவர்­க­ளது கோரிக்கை விவ­ரங்­கள் குறித்து கேட்­ட­றிந்­த­து­டன், சம்­பந்­தப்­பட்ட துறை அலு­வ­லர்­கள் உடன் நட­வ­டிக்கை எடுத்­திட அறி­வு­றுத்­தி­னார்.

இந்த ஆய்­வுக் கூட்­டத்­தில் துணை முத­ல­மைச்­சர் தெரி­வித்­த­தா­வது:–

தமி­ழ­கம் முழு­வ­தும் பொது­மக்­கள் அளிக்­கும் மனுக்­க­ளுக்கு தீர்வு காணப்­பட்டு வரு­கி­றதா என்­பதை தொடர்ந்து ஆய்வு செய்து வரு­கி­றோம். இதற்­கா­கத்­தான் ‘முத­மைச்­ச­ரின் முக­வரி’ என்ற தனித்­து­றை­யையே முத­ல­மைச்­சர் அவர்­கள் உரு­வாக்­கி­னார்­கள். இன்­றைய தினம் மனு­தா­ரர்­க­ளி­டம் அலை­பே­சி­யில் தொடர்பு கொள்­ளப்­பட்­டது போன்று தொடர்ந்து நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டும். எனவே அனைத்­துத் துறை அலு­வ­லர்­க­ளும் தங்­க­ளுக்கு வரும் மனுக்­கள்­மீது உரிய விசா­ர­ணை­கள் மேற்­கொண்டு, விரை­வாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.

மக்­கள் பிர­தி­நி­தி­க­ளா­கிய நாங்­கள் மக்­க­ளின் கோரிக்­கை­கள் மற்­றும் தேவை­க­ளின் அடிப்­ப­டை­யில்­தான் திட்­டங்­க­ளைத் தீட்­டு­கி­றோம். அவை முறை­யாக பொது­மக்­க­ளுக்­குச் சென்று சேர்­வது அலு­வ­லர்­களின் கைக­ளில்­தான் இருக்­கி­றது. அதை நீங்­கள்­தான் உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என நான் கேட்­டுக்­கொள்­கி­றேன்.

இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் அவர்­கள் தெரி­வித்­தார்.

சிறப்­புத்­திட்ட செய­லாக்­கத்­துறை அலு­வ­லர்­கள் வேலூர் மற்­றும் இரா­ணிப்­பேட்டை மாவட்­டங்­க­ளில் மேற்­கொண்ட ஆய்­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் மக்­க­ளுக்கு அர­சுத்­திட்­டங்­க­ளின் கீழ் அர்ப்­ப­ணிப்பு உணர்­வு­டன் பணி­யாற்­றிய அலு­வ­லர்­

களுக்கு துணை முத­ல­மைச்­சர் அவர்­கள் பாராட்­டுச் சான்­றி­தழ் மற்­றும் கேட­யங்­களை வழங்­கி­னார்.

அத­ன­டிப்­ப­டை­யில் வேலூர் மாவட்­டத்­தில் மக்­க­ளு­டன் முதல்­வர் திட்­டத்­தில் பெறப்­பட்ட மனுக்­க­ளின் மீது விரைந்து நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­தற்­காக வேலூர் வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கத்­தைப் பாராட்டி வட்­டாட்­சி­யர் தே.முர­ளி­த­ரன் அவர்­க­ளுக்­கும், சிறப்­பாக மருத்­துவ சேவை வழங்­கிய திரு­வ­லம் ஆரம்ப சுகா­தார நிலை­யத்­திற்­காக மருத்­துவ நல அலு­வ­லர் திரு­மதி.எம்.ராணி அவர்­க­ளுக்­கும், அணைக்­கட்டு வட்­டத்­தில் சிறப்­பாக பணி­யாற்­றி­ய­தற்­காக ஆச­னாம்­பட்டு அரசு உயர்­நி­லைப்­பள்ளி பட்­ட­தாரி ஆசி­ரி­யர் டி.சர­வ­ணன் அவர்­க­ளுக்­கும் நற்­சான்­றி­தழ் மற்­றும் கேட­யங்­களை தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­சர் அவர்­கள் வழங்­கி­னார்.

இரா­ணிப்­பேட்டை மாவட்­டத்­தில் அதிக தேர்ச்சி விகி­தத்தை அளித்த அரக்­கோ­ணம் ஊராட்சி ஒன்­றி­யம், மின்­னல் ஊராட்­சி­யில் செயல்­பட்டு வரும் அரசு மக­ளிர் மேல்­நி­லைப் பள்­ளியை பாராட்டி தலை­மை­யா­சி­ரி­யர் திரு­மதி.வ.கு.சாரதா அவர்­க­ளுக்­கும், சிறப்­பாக மருத்­துவ சேவை வழங்­கிய கொடைக்­கல் ஆரம்ப சுகா­தார நிலை­ யத்­திற்­காக மருத்­துவ நல அலு­வ­லர் கு.கோபி­நாத் அவர்­க­ளுக்­கும், சிறப்­பாக சேவை வழங்­கிய சுமை­தாங்கி நகர கூட்­டு­றவு கடன் சங்­கத்தை பாராட்டி செய­லா­ளர் கண்­ணன், தனி அலு­வ­லர் தயா­ளன் ஆகி­யோ­ருக்­கும், மாற்­றுத் திற­னா­ளி­கள் நல­னுக்­காக சிறப்­பாக பணி­யாற்­றி­ய­தற்­காக மாவட்ட மாற்­றுத் திற­னா­ளி­கள் நல அலு­வ­லர் பூ.சர­வ­ண­கு­மார் ஆகி­யோ­ருக்­கும் துணை முத­ல­மைச்­சர் அவர்­கள் நற்­சான்­றி­தழ் மற்­றும் கேட­யங்­களை வழங்­கி­னார்.

இக்­கூட்­டத்­தில் நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன், கைத்­தறி மற்­றும் துணி­நூல் துறை அமைச்­சர் ஆர்.காந்தி, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் முனை­வர் எஸ்.ஜெகத்­ரட்­ச­கன், டி.எம். கதிர் ஆனந்த், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ஏ.பி. நந்­த­கு­மார், ப.கார்த்­தி­கே­யன்,

திரு­மதி அமுலு விஜ­யன், ஜெ.எல்.ஈஸ்­வ­ரப்­பன், அ.செ.வில்­வ­நா­தன், வேலூர் மாந­க­ராட்சி மேயர் திரு­மதி சுஜாதா ஆனந்த குமார், மாவட்ட ஊராட்­சிக் குழுத்­த­லை­வர் மு.பாபு, துணை மேயர் மா.சுனில் குமார், சிறப்­புத்­திட்ட செய­லாக்­கத்­துறை செய­லா­ளர் மருத்­து­வர் தாரேஸ் அக­மது, மாவட்ட ஆட்­சித்­த­லை­வர்­கள் திரு­மதி வே.இரா.சுப்­பு­லெட்­சுமி, (வேலூர்), முனை­வர்.ஜெ.யு. சந்­தி­ர­கலா, (ராணிப்­பேட்டை), சிறப்­புத் திட்ட செய­லாக்­கத்­துறை துணைச்­செ­ய­லா­ளர் மு.பிர­தாப் மற்­றும் அரசு அலு­வ­லர்­கள் கலந்து கொண்­ட­னர்.

Comments

Popular posts from this blog

திருப்பத்தூர் மாவட்டம், அம்பூர்,ஹஸ்னாத்- யே -ஜாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு! குற்றவாளிக்கு தண்டனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலில் நிறைய பொதுமக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனாலும் BJP கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது தேர்தல் ஆணையர் வாக்குச்சிட்மூலம் மீண்டும் எதிர்க்கட்சிகள் தேர்தல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்