கழக அரசின் பங்களிப்பைத் தவிர்த்துவிட்டு, சென்னை மாநகரின் வளர்ச்சி வரலாற்றை எழுதிட முடியாது!
களுக்கு அடிக்கல் நாட்டி, 17 முடிவுற்ற திட்டப் பணிகளை, மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, மாநகராட்சியில் பணிவாய்ப்பினை வழங்கும் வகையில், 559 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி
வாழ்த்திப் பேசினார்.
அப்போது அவர், `கழக அரசின் பங்களிப்பைத் தவிர்த்துவிட்டு, சென்னை மாநகரின் வளர்ச்சி வரலாற்றை எழுதிட முடியாது! சென்னைக்குப் பெயரிட்டு வளர்த்தெடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில், மேயராக ‘சிங்காரச் சென்னை’ தந்து மேம்படுத்தியவர் நம் கழகத்தலைவர். இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சராக ‘சிங்காரச் சென்னை 2.o’ மூலம், சென்னையின் வளர்ச்சியை உலக நாடுகளே வியக்கின்ற வகையில் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.
விழாவின்போது அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
சென்னை மாநகராட்சியின் சார்பாக, நடக்கின்ற இந்தச் சிறப்புக்குரிய நிகழ்ச்சியில் பங்கேற்று, ரூபாய் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி நிறைவுபெற்ற 17 பணிகளை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைப்பதிலும், ரூபாய் 280 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 500 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதிலும், 600 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதிலும், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெருமை அடைகிறேன்.
சென்னை பெருமழை
சமீபத்தில், சென்னையில் இரண்டுமுறை பெரும் மழை வந்தது. ஒரு புயலும் அடித்தது. மழைச் சீற்றத்திலும் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், நம் கழக அரசு சிறப்பாகச் செயல்பட்டது. அதற்கு அமைச்சர் நேரு அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றிகளையும் சென்னை மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எப்போதுமே சொல்வார். அண்ணன் நேரு அவர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்துவிட்டால், அது ஏற்கனவே 50 சதவிகிதம் வெற்றி என்று. அதன்படி, மழை வெள்ள காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்கு மீண்டும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வந்தாரை வழவைக்கும் சென்னை
குறிப்பாக, சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மிகச்சிறப்பாக பணிகளை மேற்கொண்டு பாதிப்புகளைத் தவிர்த்தீர்கள். அதற்கு என் பாராட்டுகளை மீண்டும், மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை என்றாலே, நாம் அனைவருக்கும் மனதில் வரும் வாக்கியம் என்னவென்றால், வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று சொல்வார்கள். பலரின் வாழ்க்கைத் தரத்தையே ஒரு நகரம் உயர்த்தி இருக்கிறது.
சென்னையின் வரலாறு
`சென்னப்பட்டினம்’ என்ற ஒரு கிராமம், இன்றைக்கு எல்லோருக்குமான மாநகரமாக மாறி இருக்கிறது என்றால், அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. இந்த வரலாறுக்குப் பின்பு தவிர்க்கமுடியாத பெயர்களும் இருக்கிறது. அந்த பெயர்கள்தான் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களும், நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும்தான்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் நம் மாநிலத்திற்கு `தமிழ்நாடு’ என்று பெயர் வைத்தார். அவரின் தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான் நம் மாநகருக்கு `சென்னை’ என்று பெயர் வைத்தார். சென்னையின் வளர்ச்சிக்கு அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, என்றைக்கும் நம் கழக அரசு ஏராளமான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.
திட்டங்கள் மேம்பாலங்கள்
சென்னையில் முதன்முதலில் மேம்பாலத்தைக் கட்டியது கலைஞர் ஆட்சிக் காலத்தில்தான். முதல் மேம்பாலம் மட்டுமல்ல இங்கு இருக்கின்ற அத்தனை மேம்பாலங்களும் நம் கழக ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்கள்தான்.
ஐ.டி நிறுவனங்கள்
சென்னையில் டைடல் பார்க் மற்றும் ஐ.டி கார்னர் கொண்டு வந்து ஐ.டி துறையில் சென்னையை முதன்மை மாநிலமாக்க வழிவகை செய்தது நம் முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியில்தான்.
சென்னைக்கு செம்மொழிப் பூங்கா, மெட்ரோ இரயில் போன்ற பல திட்டங்களைக் கொண்டு வந்ததும், நம் கழக அரசுதான். எல்லோருக்கும் எல்லாம் என்ற நம் திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படைபோல, சென்னை எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.
சிங்காரச் சென்னை- 2.0
சென்னையின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக இருந்தவர் நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். சிங்காரச் சென்னைக்குப் பிறகு மாண்புமிகு முதலமைச்சரின் சிங்காரச் சென்னை- 2.0 என்ற மாபெரும் கனவு தற்போது சாத்தியப்பட்டு வருகிறது.
குறிப்பாக, சென்னையின் சீரான வளர்ச்சியை உறுதிசெய்ய, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை நம் முதலமைச்சர் அவர்கள் ரூபாய் 6,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்.
கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, பழமை வாய்ந்த கட்டடங்கள் புனரமைப்பு, சுகாதாரக் கட்டமைப்பு மேம்பாடு, நகரின் பசுமைப் பாதுகாப்பு, நீர்நிலைகள் புனரமைப்பு, நிலத்தடி நீர்ச் சேமிப்பு, சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை என்று பல விஷயங்கள் சென்னையில் நடந்துக்கொண்டு இருக்கின்றன.
இன்றைக்கு `ஹேப்பனிங் சிட்டி’ என்ற வார்த்தை ஆங்கிலத்தில் உண்டு. அதற்கு ஏற்றமாதிரி சென்னை, இன்றைக்கு ஒரு ஹேப்பனிங் சிட்டியாக மாறிக்கொண்டு இருக்கிறது.
பூங்காக்கள்
மக்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் தனக்குள் சென்னை வைத்து இருக்கிறது. மக்கள் நடப்பதற்கான நடைபாதை வசதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள் என்று பல இடங்களில் அமைத்து இருக்கிறோம்.
குழந்தைகள் விளையாட சூழல், பிள்ளைகள் விளையாட்டுப் பயிற்சி எடுப்பதற்கான வாய்ப்பு என்று எல்லாம் இன்று ஒரே இடத்தில் கிடைக்கின்றன. சிங்காரச் சென்னை 2.0 என்ற திட்டத்தின்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்து பன்னிரண்டு பணிகள் ரூபாய் 901 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களின் தொடர்ச்சியாகத்தான், இன்றைக்கு வேளச்சேரி, தாம்பரம் பிரதான சாலைகளில் உள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி மற்றும் கண்ணகி நகர் ஆகிய இடங்களில் இரண்டு புதிய பூங்காக்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன.
எழில் நகர், கண்ணகி நகர் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் புதிய விளையாட்டுத் திடல்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இன்றைக்கு ஒட்டுமொத்தமாக 17 பணிகள் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து இருக்கிறோம்.
அடிக்கல் நாட்டுதல்
அதுமட்டுமில்லாமல், இன்றைக்கு 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 493 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது. சென்னையில் 225 குளங்கள் ஏற்கனவே இருக்கின்ற நிலையில், மேலும், புதிதாக 41 குளங்களை உருவாக்கும் பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டு இருக்கிறது.
நீர் நிலைகள் சீரமைப்பு
நீர்நிலைகள் சீரமைப்பில் கவனம் செலுத்தியதின் காரணத்தால்தான் சமீபத்தில் 15 சென்டி மீட்டர் மழை பெய்தும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. மழைநீர் வடிகால்களைச் சீர் செய்து, மழை நீர் தேங்குவதைத் தடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அந்த தண்ணீரைத் தேக்கி நிலத்தடி நீரை உயர்த்தும் கவனத்தையும் நாம் செலுத்திக்கொண்டு இருக்கிறோம்.
இந்த மாதிரியான பணிகளின் மூலமாகவே, இந்த ஆட்சியின் நோக்கம் என்ன என்று எல்லோருக்கும் புரிந்திருக்கும். இன்னும் சென்னையை வளர்க்க வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் ஒரே எண்ணம்.
பணி நியமன ஆணை
இன்றைய நிகழ்ச்சி மூலமாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் பணி புரிந்து பணிக் காலத்தின் போது காலமான அலுவலர்கள், பணியாளர்கள் குடும்பத்தின் துயர் துடைக்கும் விதமாக, 106 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட இருக்கிறது.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும், பெருநகர சென்னை மாநகராட்சியில், 847 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கி இருக்கிறோம்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சுகாதார மையங்களில் மருத்துவ அலுவர்கள், சிறப்பு மருத்துவ அலுவலர்கள், மருத்துவ சார் பணியாளர்கள் மற்றும் 453 பணியாளர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை இன்று வழங்க இருக்கிறோம். உங்கள் அத்தனைப்பேருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிங்காரச் சென்னை-2.0 மக்களுக்கானது, எல்லோருக்குமானது, எல்லோரையும் உள்ளடக்கியதுதான். ஆகவே, எல்லோரும் இணைந்து சென்னையை இன்றும் பல உயரங்களுக்கு எடுத்துச் செல்வோம் என்று சொல்லி, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசினார்.
பங்கேற்றவர்கள்
அமைச்சர்கள் கே.என்.நேரு, ப।ி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், மா.சுப்ரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ்.பரந்தாமன், தாயகம் கவி, மயிலை த.வேலு, ஆர்.டி.சேகர், ஐடீரீம்ஸ் மூர்த்தி, மாதவரம் சுதர்சனம், எபினேசர், ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், அரவிந்த் ரமேஷ், மருத்துவர் எழிலன், பிரபாகர்ராஜா, காரம்பாக்கம் கணபதி, துணை
மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் இராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர்கள் க.தனசேகரன், விஸ்வநாதன், டாக்டர்.சாந்தகுமாரி, இளைய அருணா, சிற்றரசு, சர்பத ஜெயதாஸ், ராஜா அன்பழகன், சொ.வேலு,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்., மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்., கூடுதல் ஆணையர் டாக்டர்.ஜெயச்சந்திர பானு ரெட்டி, இணை ஆணையர் முனைவர் விஜயராணி ஐ.ஏ.எஸ்., துணை ஆணையர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.எஸ்., பிரித்திவிராஜ் ஐ.ஏ.எஸ்., வட்டார துணை ஆணையர் ரவிதேஜா ஐ.ஏ.எஸ்., குடிநீர் வழங்கல் வாரிய மேலாண்மை இயக்குநர் வினய் ஐ.ஏ.எஸ்., குடிநீர் வழங்கல் வாரிய செயல் இயக்குநர் சரவணன் ஐ.ஏ.எஸ்., மற்றும் மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள்,
அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment