துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று – கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி விழாப் பேருரையாற்றுகிறார்!.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நடத்தும் ஆதி கலைகோல் கலை இலக்கிய சங்கமம், கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 01 மற்றும் 02 டிசம்பர் 2024–இல் நடைபெற இருந்த நிகழ்வு நிர்வாக காரணத்தை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் 02.12.2024 அன்று காலை 09.00 மணிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.
இவ்விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விழாவில் பங்கேற்கும் கலைஞர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி விழாப் பேருரை யாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தலைமை ஏற்கவும், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் முன்னிலை வகிக்கவும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழக தலைவர் உ. மதிவாணன் சிறப்புரையாற்று கின்றனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொன்மையான கலைகள், பண்பாடு, இலக்கியம், இசை, நடனம் ஆகிய கலை வடிவங்களை பாதுகாக்கவும், காட்சிப் படுத்தவும், ஆதி கலைக்கோல் என்னும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை மற்றும் இலக்கிய சங்கமம் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இயக்கங்கள் மற்றும் தலைவர்களின் வரலாற்று தொகுப்புகள் காட்சிப்படுத்தவும். இம்மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் நாற்பதுக்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் வல்
Comments
Post a Comment