GST வரி கண்டித்து கடை அடைப்பு போராட்டம் 29-11-2024 இந்த தேதியில்.
GST வணிக சமூகத்திற்கான முக்கிய அறிவிப்பு
GST கவுன்சில் தீர்மானத்தின் பேரில், 10.10.2024 முதல் வணிக பயன்பாட்டிற்கான கட்டிட வாடகைக்கு 18% GST வரி RCM முறையில் விதிக்கப்பட்டுள்ளது.
இது சிறு தொழில்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் தீமையான நடவடிக்கையாகும். வாடகை செலவில் ஏற்படும் கூடுதல் சுமை, வியாபாரத்தின் அடித்தளத்தை அசைக்கிறது.
எதிர்ப்பு எங்கள் உரிமை!
இன்று ஒன்று சேராமல் இனி எப்பொழுது ஒன்று சேர போகின்றோம் அரசியல் பார்க்க வேண்டாம், தலைவர்களை பார்க்க வேண்டாம், சங்கத்தையும் சங்கத் தலைமையையும் பார்க்க வேண்டாம், நம்மை பாருங்கள் நமது தொழிலை பாருங்கள் சிறு குறு மற்றும் பெரும் நிறுவனங்கள் சிந்தனை செய்வீர்!. இன்று எங்களுக்கு நாளை உங்களுக்கு மீண்டும் ஒருமுறை மறுபரிசலினை செய்து சுயமாக சிந்திப்பீர்!
இந்த சுமையால் தொழில்முனைவோர் முதல் தொழிலாளி வரை அனைவரும் பாதிக்கப்படுகிறோம். இதற்கு எதிராக, 29.11.2024 வெள்ளிக்கிழமை முழு நாளாக கடையடைப்பு நடத்துகிறோம்.
நாம் ஒன்றிணைந்தால் மட்டுமே மாற்றம் சாத்தியம்!
சிறு தொழில்களாக இருந்தாலும், பெரிய நிறுவனமாக இருந்தாலும், எல்லாரும் கலந்து கொண்டு எமது எதிர்ப்பை வலியுறுத்த வேண்டுகிறோம்.
பொதுநல மட்டுமே கருதி எனது கருத்தை வெளியிடுகின்றேன் முனைவர் க.திருமுருகன்
Comments
Post a Comment