நாடாளுமன்றக் கழகக் குழுக் தலைவர் கனிமொழி கருணாநிதி ஒத்தி வைப்பு தீர்மானம் தாக்கல்
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ICAI, தமிழ்நாட்டில் சி.ஏ. பவுண்டேஷன் தேர்வுகளை ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று நடத்தத் திட்ட மிட்டுள்ளது. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக இந்த தேர்விற்கான தேதியை மாற்றியமைக்கக் கோரி தி.மு.க.வின் நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்கள், ஒத்திவைப்பு தீர்மானத்தைத் தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி கருணாநிதி தாக்கல் செய்த ஒத்திவைப்பு தீர்மானம் வருமாறு:-
2025 ஜனவரி 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் CA தேர்வைப் பொங்கல் பண்டிகை அன்று நடத்தும் முடிவு, தமிழகத்தின் கலாச்சார மரபுகள் மற்றும் மக்களின் உணர்வுகளை ஒன்றிய அரசு புறக்கணிப்பதை எடுத்துக் காட்டுகிறது.
பொங்கல் வெறும் பண்டிகை அல்ல; இது தமிழ் பாரம்பரியத்தின் உயிர் நாடியாகும். குடும்பங்கள் ஒன்று கூடி அவர்களின் கலாச்சாரம் மற்றும் விவசாய வாழ்க்கை முறையைக் கொண்டாடும் பண்டிகை தான் பொங்கல். இது போன்ற முக்கியமான தருணத்தில் தேர்வுகளைத் திட்டமிடுவது மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் மீது தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
மகர சங்கராந்தி போன்ற பண்டிகைகள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது என்று கூறி விமர்ச னங்களைத் திசை திருப்ப பாஜக முயற்சிக்கும் அதே வேளையில், இந்த வாதம் தமிழர்களின் பொங்கல் பண்டிகையின் தனித்துவத்தை அங்கீகரிக்கத் தவறிவிட்டது.
தீபாவளி (இந்த மாதம் நவம்பர் 2024) மற்றும் மக்களவை தேர்தல் (மே 2024) போன்ற காரணங்களுக்காகத் தேர்வுகளை ஒத்திவைத்த அதே ஐசிஏஐ, இப்போது தமிழகத்தின் மிக முக்கியமான பண்டிகைக்கு இடமளிக்க மறுப்பது ஏற்று
Comments
Post a Comment