திராவிட மாடல்” அரசின் மீது நாள்தோறும் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்
திராவிட மாடல்” அரசின் மீது நாள்தோறும் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசும் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அவர்களின் அறிக்கை வருமாறு:
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குக் கூட்டணி கிடைக்காமல் அல்லாடும் திரு.பழனிசாமி, அ.தி.மு.க.வில் நடக்கும் மோதல்களைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் திணறும் பழனிசாமி இல்லாததையும் பொல்லாததையும் உளறிக்கொண்டிருக்கிறார். அவருடைய பொய் குற்றச்சாட்டுகளுக்கு அரசின் சார்பாகப் பதில்கள் அளித்தாலும் அவற்றை புறக்கணித்து மீண்டும் மீண்டும் பொய்களையே முன்வைக்கிறார்.
முதல்வர் உத்தரவுப்படி
7 தனிப்படைகள் அமைப்பு!
திருப்பூர் மாவட்டம், அவினாசிபாளையம், அழகுமலைக்கு அருகே உள்ள சேமலைக்கவுண்டன் பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது உத்தரவின் பேரில் உடனடியாக ஏழு சிறப்பு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது தமிழ்நாடு காவல்துறை.
கொலையாளிகள் 6 பவுன்
தங்கச் சங்கிலியையும், கொலை செய்யப்பட்ட செந்தில் குமாரது செல்போனையும் எடுத்துச் சென்றுள்ளனர். திருட்டுக்காக நடந்த சம்பவமா இல்லை வேறு காரணங்களுக்காக நடந்த சம்பவமா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவிலேயே கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி அவர்களோ தனிநபர் குற்றங்
Comments
Post a Comment