சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை
இன்று 24-08-25 சென்னையில், மாநில – ஒன்றிய அரசுகளின் உறவுகள் குறித்து, ஆய்வு செய்வதற்கான குழு ஏற்பாடு செய்திருந்த, தேசிய கருத்தரங்கில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், ``அரசியல மைப்புச் சட்டம் உறுதிப்படுத்திய மாநில சுயாட்சி உரிமைகளை, முழுவதுமாக நிலைநாட்டிடும் வரை, தமிழ்நாடு முன் வரிசையில் நின்று போராடும் – வெல்லும்’’ என்று குறிப்பிட்டார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு: மாநில மற்றும் ஒன்றிய அரசின் உறவுகள் குறித்த, இந்த இரண்டு நாள் கருத்தரங்கத்தின் நிறைவு விழாவில், உங்களை எல்லாம் சந்தித்து, உங்களுடன் உரையாற்று வதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். சர்வாதிகாரப் போக்கு ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்குகளால் மாநிலங்களின் உரிமைகள் கேள்விக்குறியாகி இருக்கின்ற இந்த நேரத்தில், சரியான தருணத்தில் இந்த முக்கிய மான நிகழ்வை, நாம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழ...