நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மொழிப் போர்க்களம் குறித்த நான்காவது மடல்.
இனத்தையும் மொழியையும் காக்கும் போராட்டக் களம் என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் முதன்மையாக நிற்கும். 1949 செப்டம்பர் 17 அன்று தி.மு.க. தொடங்கப்பட்டு, மறுநாள் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் கூடி நின்ற தமிழ் மக்களிடம் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள், “பெரியாரே.. நீங்கள் அளித்த பயிற்சிப் பக்குவம் பெற்ற நாங்கள், உங்கள் வழியிலேயே சர்க்காரை எதிர்த்து சிறைச்சாலை செல்லத்தான் வேண்டுகோள் விடுக்கிறோம். தொடக்க நாளாகிய இன்றே!” என்று அறிவித்தார். தி.மு.கழகம் பிறந்தது முதல் இந்த 75 ஆண்டுகளாக சந்திக்காத களம் இல்லை. எதிர்கொள்ளாத அடக்குமுறைகள் கிடையாது. வழக்குகள், சிறைவாசம், உயிர்த்தியாகம் எல்லாவற்றையும் தாங்கித்தான் தாய்மொழியாம் தமிழையும் தமிழர்களின் உரிமையையும் காக்கின்ற மகத்தான இயக்கமாகத் திகழ்கிறது. அதனால்தான், தி.மு.க ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தால் இந்தியாவை...